விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

By Bala Siva

Published:

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா ஆகிய நான்கு பிரபலங்கள் ஒரே படத்தில் இருந்தும் இயக்குனர் ஒருவரின் படம் தோல்வி அடைந்தது. இன்று வரை விஜய்யின் மிக மோசமான படம் என்ற அவப்பெயரையும் பெற்றது என்றால் அந்த படம் ‘உதயா’. அந்த படத்தை இயக்கியவர் அழகம் பெருமாள்.

மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த அழகம்பெருமாள், அதன் பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கு மணிரத்னம் உதவி செய்தார். தன்னுடைய கதை, திரைக்கதையில் ‘டும் டும் டும்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் 2001ஆம் ஆண்டு வெளியானது.

பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!

udhaya3

மாதவன், ஜோதிகா, மணிவண்ணன், விவேக் உள்பட பலர் நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’ படம் நல்ல வரவேற்பு பெற்றது. தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

இந்த படத்தை அடுத்து அழகம்பெருமாள் ‘ஜூட்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் முதல் முறையாக நடிகர் ஸ்ரீகாந்த் ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பார். அதுவரை அவரை ஒரு ரொமான்ஸ் ஹீரோவாகவே பார்த்த ரசிகர்கள் அவரை ஆக்சன் ஹீரோவாக ஏற்று கொள்ளவில்லை. மேலும் இந்த கதை கிட்டத்தட்ட விக்ரம் நடித்த தூள் படத்தின் கதையை போலவே இருந்தது என்றும் விமர்சனங்கள் வெளியானது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை அடுத்து தான்  விஜய் நடித்த உதயா என்ற திரைப்படத்தை இயக்க அழகம்பெருமாளுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய், சிம்ரன் நடிக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க, சுஜாதா வசனம் எழுத மிகவும் பிரமாண்டமாக உருவானது. பிரமீட் நடராஜன் இந்த படத்தை தயாரித்தார்.

அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே பல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாரான நிலையில் திடீரென தயாரிப்பாளர் பிரமீட் நடராஜன் அவர்களுக்கு விஜய் போன் செய்து என்னுடைய இன்னொரு திரைப்படம் வெளியாக உள்ளது, அந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் அந்த படத்திற்கு பின்னர் உதயா திரைப்படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று அறிவுரை கூறினார்.

udhaya2

ஆனால் ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டதால் இனியும் இந்த படத்தை தன்னால் ரிலீஸ் செய்யாமல் இருக்க முடியாது என்று முடிவு செய்த அவர் விஜய்யின் பேச்சை கூட கேட்காமல் ரிலீஸ் செய்தார். விஜய் சொன்ன அந்த படம் ‘கில்லி’ திரைப்படமாகும். விஜய்யின் பேச்சை கேட்காமல் அவசர அவசரமாக இந்த படத்தை ரிலீஸ் செய்தார். கடன் மற்றும் வட்டி நெருக்கடி காரணமாக இனிமேலும் ரிலீஸ் தள்ளி வைத்தால் தாங்காது என்று முடிவு செய்துதான் அவர் படத்தை ரிலீஸ் செய்தார்.

ஆனால் அவரது முடிவு தவறான முடிவாக மாறியது. படம் படுதோல்வி அடைந்தது. விஜய் நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்திற்கு பின்னர் உதயா ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த படமும் வெற்றி பெற்றிருக்கும். இந்த படத்தின் கதை மற்றும் பாடல்கள் ஆகியவை அனைத்தும் சூப்பராக இருந்தும் சரியான தேதியில் ரிலீஸ் ஆகாததால் படுதோல்வி அடைந்தது.

udhaya1

விஜய்யின் முதல் படத்திலிருந்து இன்று வரை வசூலை எடுத்து பார்த்தால் உதயா திரைப்படம் தான் மிக மோசமான வசூலை செய்த படமாகும். அவரது படுதோல்வி படம் இதுதான்.

நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!

விஜய்யின் பேச்சை கேட்டு ‘கில்லி’ படத்திற்கு பின் ‘உதயா’ படத்தை ரிலீஸ் செய்து இருந்தால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்காது என்று பிரமீட் நடராஜன் பல பேட்டிகளில் கூறி இருந்தார்.