பீடா கடையில் வேலை.. பாலு மகேந்திரா படத்தில் இருந்து நீக்கம்.. அதன்பின் கொடுத்த சூப்பர்ஹிட்.. விக்னேஷ் திரைவாழ்க்கை..!

ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள ஒரு பீடா கடையில் வேலை பார்த்த நடிகர் விக்னேஷ், அதன்பின் பாலு மகேந்திரா படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். ஆனால் அந்த படத்தில் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன் பிறகு தான் அவர் சின்னத்தாய் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வந்தார்.

நடிகர் விக்னேஷ் ஈரோட்டை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் தொழிலதிபர்களாக இருந்த நிலையில் விக்னேஷ் மட்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக சென்னை வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோ எதிரே உள்ள ஒரு பீடா கடையில் வேலை பார்த்துக்கொண்டே அவர் சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார்.

அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!

அப்போதுதான் அவருக்கு பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு வாரம் நடித்த நிலையில் அவருடைய நடிப்பில் திருப்தி அடையாத பாலுமகேந்திரா அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு அதன் பின் பிரசாந்த்தை நடிக்க வைத்தார். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

chinnathayi

முதல் படமே பாலு மகேந்திரா படம் என மகிழ்ச்சியில் இருந்த விக்னேஷ் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும் வருத்தமடைந்தார். இருப்பினும் தனது முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில்தான் இயக்குனர் கணேஷ்ராஜ் என்பவர் இயக்கத்தில் உருவான ‘சின்னத்தாயி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

விக்னேஷ்க்கு இந்த படம் மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இளையராஜாவின் 8 பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும்’ என்ற பாடல் இந்த படத்தில் மூன்று முறை வரும். மூன்று பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் ‘நான் ஏரிக்கரை’ என்ற பாடல் இரண்டு முறை வரும். அதில் ஒன்றை இளையராஜாவே பாடியிருப்பார்.

vignesh 2

‘சின்னத்தாயி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து விக்னேஷுக்கு அதிக வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக 1993ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘கிழக்கு சீமையிலே’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் விஜயகுமார் மற்றும் ராதிகா அண்ணன் தங்கையாக நடித்து இருந்த நிலையில், நல்ல கேரக்டர் என்பதால் விக்னேஷ் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!

இதனை அடுத்து உழவன், மனதில் ஒரு பாட்டு, முத்து குளிக்க வாரீயளா, பசும்பொன், செல்லக்கண்ணு, நாடோடி மன்னன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதன் பிறகு இவர் நடித்த படங்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை.

ஒரு கட்டத்தில் அவர் குணசேத்திர நடிகராக மாறினார். எந்த வேடம் கிடைத்தாலும் அதில் நடிக்க தொடங்கினார். இருப்பினும் ஒரு மிகப்பெரிய நடிகராக, வெற்றிகரமான நடிகராக கோலிவுட்டில் வலம் வர வேண்டிய விக்னேஷ் சரியான கதையை தேர்வு செய்யாததால் அடுத்தடுத்து தோல்வி படங்கள் கொடுத்ததால் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தற்போது அவர் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தால் மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவதற்கு வாய்ப்பு உண்டு.

14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!

திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிகர் விக்னேஷ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே உனக்காக’, ‘ரோஜா’ ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ‘வேலம்மாள்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...