13 வயதில் சினிமாவில் நடிக்க வந்த நடிகை ஒருவர் முதல் பட சம்பளம் வெறும் பத்து ரூபாய் வாங்கிய நிலையில் அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் இன்று நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார் என்பதும் அவரிடம் இன்று 65 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகை தான் நடிகை ஜெயப்பிரதா.
நடிகை ஜெயப்பிரதா ஆந்திராவை சேர்ந்தவர். சிறுவயதிலேயே நடனம், நாட்டியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பள்ளியில் படிக்கும் போது நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குனர் ஒருவர் அவரது நடனத்தை கண்டு வியந்து தனது படத்தில் உள்ள நடன காட்சி ஒன்றில் நடனமாட அவரை ஒப்பந்தம் செய்தார்.
10ஆம் வகுப்பு படிக்கும்போதே எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை லதாவின் மறுபக்கங்கள்..!
அந்த நடன காட்சி வெறும் பத்து நிமிடங்கள் வந்தாலும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது. இதையடுத்து அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தான் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான ’மன்மத லீலை’ என்ற திரைப்படத்தில் ஜெயப்பிரதா நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அவருக்கு 14 வயது தான். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும் தமிழில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு தெலுங்கு வாய்ப்புகள் குவிந்தன.
பல தெலுங்கு படங்களில் நடித்த அவர் மீண்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நினைத்தாலே இனிக்கும்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!
இந்நிலையில் பாலிவுட் படங்களில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். தொடர்ச்சியாக அவர் பல இந்தி படங்களில் நடித்தார். ஸ்ரீதேவிக்கு முன்பே ஜெயப்பிரதாதான் தென்னிந்தியாவிலிருந்து சென்று சூப்பர் ஸ்டாராக இருந்தார்.
அதன் பிறகு தமிழில் அவர் ’47 நாட்கள்’ மற்றும் ‘சலங்கை ஒலி’ உட்பட சில படங்களில் நடித்தார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். அதேபோல் 2018 ஆம் ஆண்டு வெளியான கேணி என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
நடிகை ஜெயப்பிரதா கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஸ்ரீகாந்த் திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் இருந்தார். மனைவியை விவாகரத்து செய்யாமல் அவர் ஜெயப்பிரதாவை திருமணம் செய்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
திரைப்படங்களில் மட்டுமின்றி அரசியலிலும் நடிகை ஜெயப்பிரதா ஈடுபட்டார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் எம்பி ஆனார். அதன் பிறகு அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அபூர்வ ராகங்கள்.. சிக்கலான கதையை சிறப்பாக கையாண்ட கே.பாலச்சந்தர்!
நடிகை ஜெயப்பிரதாவின் தற்போதைய சொத்து மதிப்பு 65 கோடி என அவர் தேர்தலில் போட்டியிடும் போது கொடுத்த விண்ணப்பத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் படத்தில் வெறும் 10 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயபிரதா இன்று 65 கோடிக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.