சமையல் அறையில் இருந்து வந்த துர்நாற்றம்.. பல மணி நேர தேடலுக்கு பிறகு பெண்ணுக்கு தெரிய வந்த உண்மை..

Published:

பொதுவாக நாம் நமது வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் எதாவது ஒரு இடத்தில் குப்பை உள்ளிட்ட விஷயங்கள் தேங்கும் போது ஒருவித துர்நாற்றம் வீசவே தொடங்கி விடும். ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்பதையே புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தான் இருக்கும். அந்த நாற்றம் இன்னும் அதிகமாவது வரை எங்கிருந்து என்பதே தெரிந்து கொள்ள முடியாத நிலையில், கலிபோர்னியாவில் ஒரு பெண்ணுக்கும் அப்படி ஒரு சூழல் தான் உருவாகி உள்ளது.

கலிஃபோர்னியாவின் யூனியன் சிட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜாக்கி பெலிக்ஸ். இவருக்கு தற்போது 28 வயதாகும் நிலையில், இவரது குடியிருப்பின் சமையல் அறையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து தான் துர்நாற்றம் வீசுவதாக அந்த பெண்ணும் கருதி உள்ளார். இதனைத் தொடர்ந்து, அதில் இருந்த குப்பை பொருட்களை வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளார் ஜாக்கி பெலிக்ஸ்.

இதன் பின்னரும் ஒரு விதமான துர்நாற்றம் ஜாக்கியின் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து வர, அவரும் என்னவென்று புரியாமல் குழம்பி போயுள்ளார். இதன் பின்னர், கேஸ் ஸ்டவ் உட்பட சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சுத்தம் செய்த போது தான் அந்த துர்நாற்றத்திற்கான உண்மை காரணம் என்ன என்பது ஜாக்கி பெலிக்ஸிற்கு தெரிய வந்துள்ளது.

அங்கே இருந்த குக்கர் ஒன்றை ஜாக்கி பெலிக்ஸ் விலக்கிய போது அதன் பின்னால் இருந்ததை பார்த்து ஒரு நிமிடம் பதறிப் போயுள்ளார். அங்கே Possum என எலியை போல இருக்கும் விலங்கு ஒன்று இருந்துள்ளது. கடந்த சில தினங்களாவே அந்த குக்கருக்கு பின்னால் தங்கி வரும் Possum, அதன் மலத்தின் துர்நாற்றம் மூலம் தான் ஜாக்கி பெலிக்ஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பேசும் ஜாக்கி அந்த மிருகம் அங்கே எப்படி வந்தது என்பது தெரியாது என்றும் அது அதன் மலத்தை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு மேல் அங்கே குடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனை தனது சக பிளாக் பிளாட்டில் தன்னுடன் வசிக்கும் சக நண்பர்களுடன் சேர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு தான் அந்த மிருகத்தையும் அவர் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Jackie Felix, 28, of California, found a cute little creature hiding behind her stove

முதலில் கையில் சிக்காமல் இது ஓட்டம் காட்டியுள்ள நிலையில் இறுதியில் பல கட்டமான போராட்டத்திற்கு பின்னர் அதனை ஒரு சிறிய குப்பிக்குள் அடைத்துள்ளனர். வீட்டில் பூனை இருப்பதால் அதிலிருந்து தான் துர்நாற்றம் வருவதாகவும் ஜாக்கி முதலில் கருத பின்னர் அந்த வாடையில் மாற்றம் இருந்ததால் தான் வேறு எதுவோ உள்ளது என்பதையும் ஊகித்து கண்டறிந்துள்ளார்.

மேலும் வீட்டின் பின்பக்க கதவிலிருந்து அது வீட்டிற்குள் வந்து இங்கே குடியிருந்து வந்ததாகவும் ஜாக்கி தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிதாக பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...