நாய் மேல இப்படி ஒரு பாசமா.. சைக்கிளிலேயே 4,707 கி. மீ பயணம்.. நெட்டிசன்களை கலங்க வைத்த பெண்..

Published:

இங்கே நாய், பூனை என சொன்னாலே தங்களின் செல்ல பிராணிகள் ஞாபகம் வரும் அளவுக்கு ஒருவிதமான பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இப்படி கூட தனது செல்லப்பிராணி மீது பாசம் இருக்குமா என உலக அளவில் உள்ளவர்களை வியந்து பார்க்க வைத்துள்ளது தனது நாய்க்காக பெண் ஒருவர் செய்த விஷயம்.

US நாட்டைச் சேர்ந்தவர் தான் கிறிஸ்டி பெல்மர் (Kristy Bellmer). இவர் ஐரோப்பா முழுவதும் சுமார் 4707 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இது வெறும் ஒரு உலக சாதனையாக மட்டுமில்லாமல் தான் வளர்த்து உயிரிழந்த ஒரு வளர்ப்பு நாய்க்கான அர்ப்பணிப்பாகவும் இந்த சம்பவம் அமைந்திருந்தது..

ஒட்டுமொத்தமாக இரண்டு மாத காலங்கள் இந்த பயணத்தை கிறிஸ்டி பெல்மர் மேற்கொண்டிருந்த நிலையில் இதில் நிறைய எமோஷனலான காரணங்களும் உள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டார்டம் பகுதியில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்த பயணத்தையும் அவர் மேற்கொண்டு இருந்தார்.

அதிலும் இந்த மே ஒன்றாம் தேதி அவரது செல்ல பிராணியாக இருந்து இறந்து போன நாயின் பிறந்த நாள் ஆகும். அந்த தினத்தில் ஆரம்பித்த அவர் இந்த 4,707 கிலோ மீட்டர் பயணத்தின் மூலம் தனது ஜிபிஎஸ்இல் நாய் போன்ற உருவத்தையும் உருவாக்க வேண்டும் என்ற முடிவு செய்து இந்த பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்பாக அதே யுஎஸ் நாட்டின் டேவிட் என்பவர் தான் சைக்கிள் மூலமாக நிறைய கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரை விட 3 மடங்கு அதிக தூரம் பயணம் செய்த கிறிஸ்டி பெல்மர், தான் ஆரம்பித்த ஆம்ஸ்ட்ராடம் இடத்திலேயே தனது பயணத்தையும் அவர் முடித்துள்ள நிலையில் இதில் நாய் வடிவமாக அந்த ஜிபிஎஸ் வரைபடம் அமைந்திருந்தது அதிக கவனத்தை பெற்று வருகிறது.

இந்த பயணம் தொடர்பாக பேசும் கிறிஸ்டி பெல்மர், அங்கே இந்த சைக்கிளிங் பயணத்தை தொடங்க காரணம் அது சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு சொர்க்கம் போன்ற இடம் என்றும் தனது நண்பர்களை சிலரை சந்திக்க வேண்டும் என்ற சூழல் இருந்ததால் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் சென்றதாக கூறியுள்ளார். அத்துடன் நாயின் வடிவம் சரியாக அனைத்து பகுதிகளிலும் வருவதற்கு ஏற்றபடி தனது திட்டத்தை போட்ட கிறிஸ்டி பெல்மர், வால் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில கடினமான இடங்களுக்கும் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மாத பயணங்கள் அத்தனை எளிதாகவும் அவருக்கு அமைந்துவிடவில்லை. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் அவரது கூடாரமும் கடுமையாக சேதம் அடைந்திருந்தது. மலை வழியாக அவர் மேற்கொண்ட பயணமும் சற்று பரபரப்பாக இருந்ததால் இப்படி பல கடினமான காரியங்களை தாண்டித்தான் இந்த கின்னஸ் சாதனையும் தற்போது கிறிஸ்டி பெல்மர் படைத்துள்ளார்.

தன்னை விட்டு உயிரிழந்து போன தனது நாயக்க நாயின் வடிவம் கூகுள் மேப்பில் வரவேண்டும் என்பதற்காக அதனை சரியாக திட்டம் போட்டு பல நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணம் பற்றி தான் தற்போது இணையவாசிகள் மற்றும் செல்லப்பிராணிகளை நேசமாக பார்த்து வருபவர்கள் வியந்து போய் தெரிவித்து வருகின்றனர்

மேலும் உங்களுக்காக...