வில்லனாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்… அதுவும் இந்த ஹீரோ படத்திலேயா…?

Published:

லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூரில் பிறந்து வளர்த்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2012 ஆம் ஆண்டு அச்சம் தவிர் என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜின் அச்சம் தவிர் என்ற குறும்படம் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் விருதுகளை க்ளேபஸ் குறும்பட விழாவில் வென்றது. இதுவே அவர் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பினை பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு அவரது குறும்படமான கலாம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் ஹைபர்லிங் திரைப்படமான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் ,2022 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் முதன்மையாக ஆக்ஷன் ஜானரில் இருக்கும். தொடர்ந்து பான் இந்தியா திரைப்படம் எடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு ஆல்பம் ஒன்றில் நடித்து தனக்கு நடிப்பிலும் உள்ள ஆர்வத்தினை காட்டி இருப்பார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் வில்லனாக தமிழ் சினிமாவில் களமிறங்கப் போகிறார். அது சம்பந்தமான ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமான புறநானூறு திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் மற்றும் ஸ்ரீலீலா நாயகியாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் போட்டோ சூட் முடிந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...