வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தால், குரூப் அட்மினை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நபர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்பர் கான் என்ற நபர், வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைக்கப்பட்டார். இந்த நிலையில், திடீரென அவர் அந்த குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து, குரூப் அட்மினை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு குரூப் அட்மின் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, அஸ்பர் திடீரென துப்பாக்கியை எடுத்து, அட்மினை சுட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூட்டுக்கு பிறகு, அஸ்பர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தானில் துப்பாக்கிகள் மிக எளிதில் கிடைப்பதாகவும், அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கி, யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்ற நிலை ஆபத்தானது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.