திடீர் திடீரென கொல்றாங்களாம்.. சாவுறாங்களாம்.. யாரு கொல்றதுன்னே தெரியலே.. பாகிஸ்தானில் மர்மமாக முறையில் மரணிக்கும் பயங்கரவாதிகள்.. செத்தவர்களை அடையாளம் தெரியாமல் அழிக்கும் பயங்கரவாதிகளின் தலைமை.. இந்திய உளவு அமைப்பின் கைவரிசையா? இவ்வளவு சுத்தமா தொழில் செய்றாங்களே.. நிழல் கூட நிஜத்தை காட்டிக் குடுக்கும்… ஆனா இந்த ‘UNKNOWN கன்மேன்’ மரணத்தை மட்டும்தான் காட்டுவான்!

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகள் ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருவது சமீபகாலமாக சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஒரு…

pakistan terrorists

பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகள் ‘அடையாளம் தெரியாத நபர்களால்’ தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருவது சமீபகாலமாக சர்வதேச அரங்கில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஐந்து முதல் ஆறு முக்கிய பயங்கரவாதிகள் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இத்தகைய கொலைகள் நடக்கும்போது அந்த அமைப்புகள் அதனை ஒரு தியாகமாக சித்தரித்து கொண்டாடி வந்தன. ஆனால், தற்போது இக்கொலைகள் குறித்த தகவல்கள் வெளியே கசிவதை தடுக்கவும், கொல்லப்பட்டவர்களின் உண்மையான அடையாளங்களை மறைக்கவும் பாகிஸ்தான் தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருவது ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவா அமைப்பின் முக்கிய தளபதியாக கருதப்படும் அப்துல் கபார் மர்மமான முறையில் உயிரிழந்தது இந்த வாரத்தின் மிக முக்கியமான நிகழ்வாகும். இவரது மரணம் குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. சிலர் அவர் சுட்டு கொல்லப்பட்டார் என்றும், சிலர் விபத்தில் உயிரிழந்தார் என்றும் கூறுகையில், அவர் தனது வீட்டிற்குள்ளேயே பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. பொதுவாக இத்தகைய உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்படும்போது மசூதிகளில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, பெரிய அளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும். ஆனால், அப்துல் கபாரின் விஷயத்தில் எவ்வித பொது அறிவிப்பும் இன்றி, மிக ரகசியமாக சடங்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இது அந்த அமைப்புகள் தங்களின் பலவீனத்தை மறைக்க விரும்புவதையே காட்டுகிறது.

இதனை தொடர்ந்து, வலீத் மற்றும் பிலால் அக்கூன் ஆகிய இரு தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் இறுதி சடங்குகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மிகக்குறுகிய வட்டத்தில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும், கொல்லப்பட்டவர்களின் தந்தை பெயர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்த தகவல்களை பொது ஆவணங்களிலிருந்து அகற்றும் வேலையில் ஐஎஸ்ஐ ஈடுபட்டுள்ளது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்த அவர்களின் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாதிகளின் தகவல் தொடர்புகளை துண்டிக்க எடுக்கப்படும் ஒரு வலுவான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளராச் செயல்பட்ட அப்துல் ரஹ்மான், ‘உஸ்தாத் ரஹ்மான்’ என்ற பெயரில் அறியப்பட்டவர். இவர் இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு திரட்டுவது மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார். இவரது மரணத்திற்கு பிறகு, கோட்லி பகுதியில் இருந்த இவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு, அவர் அங்கு வசித்ததற்கான அடையாளங்களே இல்லாமல் மாற்றப்பட்டுள்ளன. இது அந்த நபருக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இருந்த தொடர்பை மறைப்பதற்கான ஒரு தந்திரமாகும். மேலும், பயங்கரவாதிகளின் மனைவிகள் அல்லது குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களை கசிய விடுவதை தடுக்க, அவர்கள் அனைவரும் ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத செயல்களை திட்டமிடும்போது, தகவல் தொடர்பு சாதனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உமர் காஷ்மீரி போன்ற நபர்கள் சிம் கார்டுகளை கடத்துவது மற்றும் தகவல்களை பரிமாற்றுவதில் மையப்புள்ளிகளாக செயல்பட்டு வந்தனர். சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Encrypted communication devices மூலம் இவர்கள் தங்களின் மேலிட தலைவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்கள். ஒரு செல்லுலார் அமைப்பிற்கும் மற்றொரு அமைப்பிற்கும் நேரடி தொடர்பு இருக்காது. இத்தகைய Central Nodes கொல்லப்படும்போது, களத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. இது பயங்கரவாத குழுக்களுக்குள் குழப்பத்தையும் அச்சத்தையும் உண்டாக்கி, அவர்களை நிலத்தடிக்கு செல்ல தூண்டுகிறது.

இந்த தொடர் கொலைகளால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் மன உறுதி பெருமளவில் சரிந்துள்ளதாக தெரிகிறது. தங்களின் பாதுகாப்பான புகலிடம் என்று கருதப்பட்ட இடத்திலேயே தங்களுக்கு ஆபத்து இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். பல ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள், இத்தகைய தாக்குதல்களுக்கு பின்னால் இந்திய உளவு அமைப்புகள் இருக்கலாம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த ‘அடையாளம் தெரியாத நபர்களின்’ வேட்டை பாகிஸ்தானின் பயங்கரவாத கட்டமைப்பை வேரோடு ஆட்டுவித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. வரும் காலங்களில் இத்தகைய நபர்களின் பட்டியலை தொகுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவது அவசியமாகும்.