2+2 எவ்வளவு என்று கூட கூட்ட தெரியாதவர்கள் ஹார்வர்டு பல்கலை மாணவர்கள்.. டிரம்ப் கேலியால் அதிர்ச்சி..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை கேலி செய்ததன் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். “இவர்கள் 2+2 கூட கூட்ட தெரியாதவர்கள்; ஹார்வர்டில் எதற்கு துணை…

trump 1

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை கேலி செய்ததன் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். “இவர்கள் 2+2 கூட கூட்ட தெரியாதவர்கள்; ஹார்வர்டில் எதற்கு துணை கணித வகுப்புகள்? என அவர் கேலி செய்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை விதிக்க டிரம்ப் முயன்ற நிலையில் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக அதனை தற்காலிகமாக டிரம்ப் இடைநிறுத்தினார். உலகின் சிறந்த மாணவர்களை ஹார்வர்டில் படிக்க தடுக்க ஏன் உங்கள் நிர்வாகம் முயற்சிக்கிறது?” என கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதில் கூறியதாவது:

2+2 எவ்வளவு என கூட்ட தெரியாதவர்கள் தான் ஹார்வர்டில் படிக்கிறார்கள். இவர்களுக்கு remedial math வேணுமாம், அதையும் ஹார்வர்டே நடத்தப்போகிறதாம். இப்படி இருக்க, இவர்கள் அங்கே எப்படி சேர்க்கப்பட்டார்கள்?” என கேள்வியெழுப்பினார்.

மேலும், இந்த வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலும் குழப்பம் தருபவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இவர்கள் தான்,” என்றும் குற்றம்சாட்டினார். எந்த திறமையும் இல்லாதவர்கள் ஹார்வர்டில் ஏன் இருக்கிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவர்கள் தான் பின்னாளில் எங்களை தாக்குகிறார்கள், அமெரிக்காவுக்கு எதிராக போராடுகிறார்கள். சிலர் யூதவாதமாகவும் பேசுகிறார்கள். இப்படி குழப்பம் தருபவர்களை எங்கள் நாடு முழுக்க விரும்பவில்லை,” எனவும் ட்ரம்ப் கூறினார்.

டிரம்பின் இந்த பேட்டி காரணமாக ஹார்வர்ட் வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் பயமும் குழப்பமும் சூழ்ந்துள்ளதாக முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் குடியேற்று நிலை மற்றும் கல்வி எதிர்காலம் குறித்து பதற்றத்தில் உள்ளனர்.

இந்த பதட்டம், ட்ரம்பின் உள்துறை செயலாளர் கிறிஸ்டி நோம், ஹார்வர்டின் Student and Exchange Visitor Program (SEVP) சான்றிதழை ரத்து செய்யும் முடிவை அறிவித்ததிலிருந்து தொடங்கியது. இது ஹார்வர்டின் 27% உள்ள வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் உரிமையை இழக்கச் செய்யும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை சட்டவிரோதமானதும், தேவையற்றதும் எனக் கண்டித்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், இது ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் எச்சரித்தது.