3 பேர் சேர்ந்து எடுத்த போட்டோ.. 4 வதாக பின்னால் தெரிந்த உருவம்..

By Ajith V

Published:

‘பேய் இருக்கா இல்லையா, நம்பலாமா நம்பக் கூடாதா?’ என ரஜினிகாந்த்தை பார்த்து வடிவேலு சந்திரமுகி படத்தில் கேட்கும் கேள்விகள் அடங்கிய காமெடி காட்சிகளை நிச்சயம் யாராலும் எளிதாக மறந்து விட முடியாது. இங்கே கடவுளை நம்பும் நபர்கள் ஏராளமாக இருக்க இன்னொரு பக்கம் அதை நம்பாதவர்களும் கூட பலர் இருக்கிறார்கள்.

உண்மையில் கடவுள் என ஒருவர் இருக்கிறாரா? இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு எதிர்மறையாக இருக்கும் பேய்கள் பற்றியும் நிறைய விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நிறைய ஆய்வுகளின் முடிவின்படி பேய்கள் இருப்பதாக சிலர் கூறி அதற்கு தகுந்த உதாரணங்களையும் தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அதை நம்ப தயாராக இல்லாமல் ஒரு மக்கள் கூட்டம் இருந்து தான் வருகின்றது. இதற்கு மத்தியில் தான் பல்வேறு விஷயங்கள் நாம் எதிர்பார்த்து கூட நினைக்க முடியாத அளவில் அரங்கேறி பேய் இல்லை என்று சொல்பவரை கூட ஒரு நிமிடம் இருக்கிறது என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நடக்கும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் தான் க்ளோ அன்னா எட்வார்ட்ஸ் என்ற பெண். இவர் பாத் என்னும் பகுதியில் தனது நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் போலராய்டு கேமரா மூலம் அன்னா எட்வார்ட்ஸ் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.

போலராய்டு கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதால் அவை உடனடியாக கிடைக்கும் என்பதால் ஆவலுடன் அதனை பார்த்த அன்னா எட்வார்ட்ஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மூன்று பேர் இருந்த அந்த புகைப்படத்தில் நான்காவதாக ஒரு உருவம் தெரிந்தது மூன்று பேரையும் ஒரு நிமிடம் பதறிப் போக வைத்துள்ளது.

இதனைப் பார்த்ததும் வெலவெலத்து போன அன்னா எட்வார்ட்ஸ் இந்த புகைப்படத்தை உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டதுடன், “இந்த புகைப்படத்தை நான் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். போலராய்டு கேமரா மூலம் எடுத்திருந்த புகைப்படத்தில், எங்கள் மூவருடன் பின்னால் ஒரு ஆவி இருப்பதாகவும் உணர்கிறோம். உங்களுடைய எண்ணங்கள் என்ன?” எனக் குறிப்பிட்டு இதனை அவர் பகிர்ந்ததும் பார்த்த அனைவருமே நிச்சயம் மிரண்டு தான் போய் உள்ளார்கள்.

பலரும் பயந்து போய் சில விதமான கமெண்ட்களை எழுப்ப இன்னும் ஒரு சிலர் அது ஏதாவது சிலையின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம் என்றும் அங்கு ஏதாவது சிலை இருந்ததா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு பக்கம் பலர் பயத்தில் ஏதாவது கமெண்ட் செய்தாலும் இன்னொரு புறம் அது வேறு ஏதாவது பொருளாக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு உருவம் அந்த புகைப்படத்தில் தெரிவதை யாரும் மறுப்பதாக இல்லை என்றாலும் அது பேய் என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...