Paris இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய தமிழர்… அவர் யார் தெரியுமா…?

Published:

உலகமே உற்றுநோக்கும் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியாவின் 117 பேர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.1900 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் இப்போட்டியை நடத்திய பிரான்ஸ், மூன்றாவது முறையாக இந்த ஆண்டு இந்த விளையாட்டு திருவிழாவை அரங்கேற்றுகிறது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டியில் வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில் ஈபிள் டவரின் பாகங்கள் பாதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு நாட்டினைச் சேர்ந்த பிரபலங்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வருவர். அப்படி இந்த வருடம் ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்தும் வாய்ப்பு ஒரு தமிழருக்கு கிடைத்துள்ளது. அவர் யார் தெரியுமா?

அவர் தர்ஷன் செல்வராஜா எனப்படும் Pastry Chef ஆவார். இவர் ஒரு இலங்கைத் தமிழர். இவர் கடந்த ஆண்டு பாரிஸ் சிட்டி ஹால் நடத்திய ‘Traditional French Baguettes’ என்ற நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார். அன்றிலிருந்து பிரெஞ்சு வெள்ளை மாளிகைக்கு இவர் தயார் செய்யும் Baguettes தான் அனுப்பப்படுகின்றன.

இந்த வருடம் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் வாய்ப்பைப் பெற்று தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய முதல் இலங்கை வம்சாவளி தர்ஷன் செல்வராஜா ஆவார். தமிழனின் பெருமை உலக அரங்கில் மதிக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும்.

மேலும் உங்களுக்காக...