பொதுவாக ஒரு நபருக்கு 40 வயது கடந்து விட்டாலே அவருக்கு வயதாகி விட்டது என்பதுடன் ஏதோ வாழ்க்கையே முடிந்து போன அளவுக்கு பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருவார்கள். இன்னொரு பக்கம் தங்கள் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க துடிக்கும் நபர்களும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் அது முடியாமல் போனால் அவ்வளவு தான் என்றும் வாழ்க்கை முடிந்து விட்டது போன்றும் ஏங்கிப் போவதை நாம் அதிகம் கவனித்திருப்போம்.
இதற்கு உதாரணமாக நாள்தோறும் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சினிமா துறையை பொருத்தவரையில் இளம் வயதில் ஹீரோவோ அல்லது இயக்குனராகவோ ஆனால் தான் நிச்சயம் நம்மால் பெரிய இடத்துக்கு செல்ல முடியும் என்ற தவறான ஒரு கருத்து அனைவரிடமும் உள்ளது.
வயது ஒரு தடையில்ல..
ஆனால் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் 50 வயது தாண்டி கூட திரைப்படம் எடுப்பவர்களும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் நடிப்பவர்களும் ஏராளமானோர் சாதித்து வருகின்றனர். இதே போல விளையாட்டுத் துறையிலும் மற்ற பல துறைகளிலும் வயது என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பல சாதனைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வயதான பெண் ஒருவர் கார் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில் இதனை வியந்தும் பார்த்து வருகின்றனர்.
இந்த காலத்தில் எல்லாம் வயதான ஒரு பெண் ஸ்கூட்டி ஓட்டினாலே எப்படி இவரால் முடிகிறது என்று தான் வியந்து பார்க்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களிடம் பயமா, பதட்டமோ இல்லை என்றால் மெய்சிலிர்த்தும் போவார்கள். அப்படித்தான் இந்த வயதான பெண்மணி கார் ஓட்டும் வீடியோவும் அமைந்துள்ளது.
கூலா ஓட்டுறாங்களே
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மஜீத் அலி என்பவர் தனது தாயார் கார் ஓட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இந்த வீடியோ நெட்டிசன்கள் லைக்குகளை ஆக்கிரமித்து வரும் சூழலில் ஏறக்குறைய அவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்றும் தெரிகிறது.
ஆனாலும் போக்குவரத்துக்கு நெரிசல் நிறைந்த சாலைகளிலும் கூட மிகக் கூலாக ஒரு இளம் பெண்ணை போல அவர் கார் ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தை கலக்கி வரும் நிலையில் தன் தாயைப் போல இந்த உலகத்தில் சிறந்த நண்பர் யாரும் இல்லை என்றும் மஜீத் அலி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். எந்த விஷயத்தை சாதிப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்க அந்த பட்டியலில் தற்போது இந்த பெண்மணி கார் ஓட்டும் வீடியோவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.