சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் ஜிகாத் நடத்த மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்த பிறகு தான் பாகிஸ்தானில் தீவிரவாதம் ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்து உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் பாகிஸ்தான் தனது தவறை மறைக்க மேற்கத்திய நாடுகள் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க முயல்வதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
மேலும், பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாத அமைப்புகளை ஆதரித்து, நிதி வழங்கியதை ஆஸிப் நேரடியாக ஒப்புக்கொண்டார். இது, பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் இருந்து வந்த அபூர்வமான ஒப்புதல் ஆகும்.
ஆஸிப் கூறியது போல, போர்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு பாகிஸ்தான் உதவியது. இதன் விளைவாக, பாகிஸ்தானில் வெளிநாட்டு போராளிகள் வந்து, தீவிரவாத சிந்தனைகளை பரப்பியுள்ளனர். .
ஆனால் பாகிஸ்தானின் தீவிரவாத பிரச்சினை ஒன்றும் மேற்கத்திய நாடுகளால் மட்டும் உருவானதல்ல. பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகள், இராணுவ ஆட்சி, மதப்பிரச்சினைகள் ஆகியவை பெரிய பங்கு வகித்துள்ளன என , வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
இப்போதும் பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்றுக்கொள்வது பாசிட்டிவ்வாக பார்க்கப்படும் நிலையில், இனிமேலாவது தங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இந்தியாவுடன் நட்புறவில் இருந்தால் மட்டுமே அந்த நாடு, தனது மக்களை காப்பாற்ற முடியும், இல்லையேல் பாகிஸ்தான் இன்னொரு சோமாலியாவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.