திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?

  பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள்…

pak army

 

பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள் மறைக்க உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள லீப்பா ஜூரா , துதிநியல் கேல் (Kel), ஷார்டி , சதாரி மற்றும் கோட்லி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத தளங்களை காலி செய்ய பாக் இராணுவம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

லஷ்கர்-ஈ-தொய்பா அமைப்பின் மூன்று முக்கிய பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் இந்த தளங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வீடு போன்ற மறைவிடங்களில், ஆயுதங்களுடன் மற்றும் உணவுப் பானங்களுடன் வசித்து, இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தனர்.

இந்திய இராணுவம் இந்த தளங்களை தாக்குதல் ஆபத்து இருப்பதால், பயங்கரவாதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற பாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ப

தான் செய்த தவறுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் இந்த நிலைமையை சமாளிக்க முயற்சிகளை எடுத்து வைத்தாலும் பாகிஸ்தானை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இவ்வளவு நடந்தும் கூட பாகிஸ்தான் திருந்தாமல் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் முயற்சியை எடுத்திருப்பது இந்தியா மற்றும் இன்று உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் திருந்தவே திருந்தாது என்றும், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு அமைதி ஏற்படும் என்றும் பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றன.