ஒரே ஒரு மரம் தான் பிரச்சனை.. ஊரையே காலி பண்ணி வேற நாட்டுக்கு செல்ல நினைக்கும் பெண்.. இப்படியும் ஒரு வினோத காரணமா..

சிலர் தங்களின் சொந்த ஊரில் ஏதாவது பிரச்சனை இருக்கும்போது வேறு மாநிலங்களிலோ அல்லது வேறு ஊருக்கோ சென்று தங்களது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் நாடு கடந்தாவது சென்று வாழ்க்கையை…

Pine Tree Allergy

சிலர் தங்களின் சொந்த ஊரில் ஏதாவது பிரச்சனை இருக்கும்போது வேறு மாநிலங்களிலோ அல்லது வேறு ஊருக்கோ சென்று தங்களது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் நாடு கடந்தாவது சென்று வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கான வழிகளிலும் ஈடுபடுவார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே ஒரு மரத்திற்காக தனது சொந்த நாடு விட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ள சம்பவமும் அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் அதிர வைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நார்விச் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராச்னா ஆண்டர்சன் (Rachna Anderson). இவருக்கு தற்போது 41 வயதாகும் நிலையில் இவர் வீட்டில் இருந்தாலே ஒரு வித வினோதமான அலர்ஜி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக பலருக்கும் தூசி, அழுக்கு அல்லது அருவருக்கத்தக்க பொருளை பார்க்கும் போது ஒருவித அலர்ஜி உருவாவதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ராச்னா என்ற பெண்ணிற்கு ஒரு வினோதமாக மரத்தின் மூலம் அலர்ஜி ஒன்று இருந்துள்ளது.

பிரச்சனையே மரம் தான்

ஸ்காட் பைன் மரம் (Scott Pines Tree) ஒன்று ராச்னா வீட்டின் முன்பு நிற்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வெளியே செல்லும்போது எந்தவித அலர்ஜியும் இல்லாமல் இருக்கும் ராசனா ஆண்டர்சன், வீட்டில் வந்து மரத்தை பார்த்ததும் உடலில் ஒருவித எரியும் தன்மை உருவாகி ஏதோ அலர்ஜி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் வீட்டில் இருக்கும்போதே ஒருவித அதிருப்தியும் விரக்தியும் உருவாவதுடன் மட்டுமில்லாமல் அந்த மரம் இருப்பதை நினைத்தாலே அவருக்கு அந்த அலர்ஜி வருவதாக கூறப்படுகிறது.
Pine Tree Allergy

கடந்த சில ஆண்டுகளாகவே இப்படி ஒரு வினோத பிரச்சனை அவருக்கு இருந்து வரும் சூழலில், இதுபற்றி மருத்துவ பரிசோதனையிலும் எதுவும் அறிந்து கொள்ள முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ராச்னா ஆண்டர்சனுக்கு அந்த மரத்தை பார்த்த பின்னர் உடலில் வீக்கம் ஏற்படுத்துவதுடன் வீட்டிற்கு வரவே பயம் உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டே போய்டணும்..

தனக்கான ஒவ்வாமை பற்றிய காரணங்கள் சரிவர தெரியாத நிலையில், அந்த மரத்திற்கு அருகில் அல்லது பார்க்கும் போது தான் இந்த விரக்தி உருவாவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பைன் மரத்தை வெட்டவும் அனுமதி கோரிய போது அது பொது சொத்து என்பதால் அப்பகுதி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வெளியே எங்காவது செல்லும் போது இந்த பாதிப்பு இல்லை எனக்கூறும் ராச்னா, நாளுக்கு நாள் தனக்கான அருவருப்பு அதிகமாவதால் ஆஸ்திரேலியாவுக்கே குடியேறி விடலாம் என்றும் அவர் யோசித்து வருகிறாராம்.