மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கும்.. 25 வருஷம் முன்னாடி அவர் சந்தித்த விபத்துக்கும் இடையே இருந்த அபூர்வ ஒற்றுமை..

Published:

உலகம் முழுவதும் ஒரு நபரால் ரசிகர்களை சம்பாதித்து கொள்ள முடியுமா என கேட்டால் அது மிக மிக அரிதான விஷயம் என்று தான் பலரும் சொல்வார்கள். அந்த வகையில் சில பிரபலங்களை மட்டும் நான் எளிதில் பட்டியல் போட்டு விடலாம். அதில் முக்கியமான ஒருவர் தான் மைக்கேல் ஜாக்சன்.

King Of Pop என உலகளவில் அறியப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன், 20 ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான இசை கலைஞராக இருந்தவர். பாடல் எழுதுவது, இசை அமைப்பது என பல திறமைகள் படைத்திருந்த மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் வெளியான அந்த காலத்திலேயே திருவிழாவை போல தான் அவரது ரசிகர்கள் உலகெங்கிலும் கொண்டாடுவார்கள்.

இசை, நடனம், பாடகர் என அனைத்திலும் யாராலும் நெருங்க முடியாத திறமையுடன் விளஙகிய மைக்கேல் ஜாக்சனின் காஸ்ட்யூம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுக்க, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இசை ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் லட்சக்கணக்கில் ஆட்கள் கூடி அவரோடு சேர்ந்து இன்னும் அதனை முக்கியமான தருணமாக மாற்றுவார்கள்.

மைக்கேல் ஜாக்சன் என்றாலே அவரை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது, அவருடைய டிரேட் மார்க் மூன் வாக் தான். அப்படி ஒரு சூழலில், 50 வயதாக இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது மறைவு ஒட்டுமொத்த உலகையும் கண்ணீர் வடிக்க வைத்திருந்த சூழலில், ஆரம்பத்தில் அவரது மரணம் மர்மமாகவே இருந்து வந்தது.

அவர் உறக்கத்திற்காக எடுத்துக் கொண்ட மருந்தின் டோஸ் அதிகமானதால் தான் மைக்கேல் ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கும் சில காலங்கள் விசாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சரியாக மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்ததற்கு முன்பாக அவரது சரி பாதி வயதில் நடந்த சம்பவம் ஒன்று குறித்த தகவல், பலரையும் வியப்படைய வைத்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் 1958 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பிறந்ததில் இருந்து 1326 வாரங்களில் அதாவது 25 வருடங்கள், 4 மாதம் மற்றும் 29 நாட்களில் விபத்து ஒன்று நிகழ்ந்தது.

பெப்சிக்காக வீடியோ ஒன்றை சுமார் 3,000 ரசிகர்களுக்கு மத்தியில் 80 களில் மைக்கேல் ஜாக்சன் ஷூட் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக தீவிபத்து உருவாகி ஜாக்சனின் தலை முடி மற்றும் முகப்பகுதியில் காயம் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது. இதில் இருந்து சரியாக 25 வருடங்கள், 4 மாதம் மற்றும் 29 நாட்கள் கழித்து தான் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்து போனார்.

இப்படி அவரது வாழ்க்கையின் முதல் பாதி முடிந்த தினத்திலும் இரண்டாம் பாதி தினத்திலும் இருந்த ஒற்றுமை பல ரசிகர்களையும் சில்லிட வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...