முரட்டு சிங்கிள்ஸ் தோத்து போவாங்க.. 55 வருசமா பொண்ணுங்கள பாக்கவே கூடாதுனு மனுஷன் செஞ்ச விஷயம்..

Published:

ஒரு ஆணாக பிறந்தால் நிச்சயம் அவர் இந்த உலகில் ஒரு பெண்ணை பார்த்தே தீர வேண்டும். தனது வீட்டிலோ அல்லது வெளியே செல்லும் போதோ பெண்களை பார்க்க வேண்டுமென்ற சூழலில், 82 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து உயிரிழந்த ஒரு நபரின் செய்தி பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதற்கு காரணம், துறவியாக வாழ்ந்த அந்த நபர், தாய் உட்பட ஒரு பெண்ணை கூட வாழ்நாளில் பார்த்ததில்லை என்பதுடன் ஆண்கள் மட்டுமே இருந்த மடாலயத்தில் தங்கி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தற்போதும் ஏறக்குறைய அப்படி ஒரு நபர் பற்றிய செய்தியை தான் பார்க்க போகிறோம். ஆப்ரிக்காவின் Rwanda என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் Calixte Nzamwita. இவர் தனது 16 வயதில் இருந்து சுமார் 55 ஆண்டுகள் வரை ஒரு பெண்ணை கூட பார்க்கக் கூடாது என்ற நோக்கத்தில் செய்த விஷயம் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

கேலிக்ஸ்ட் என்ற இந்த நபருக்கு Gynophobia என்ற பெண்களை பார்த்தாலே வெறுப்பு வரும் பிரச்சனை இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. தனது 16 வயதில் பெண்கள் மீது வெறுப்பு அதிகமாக கேலிக்ஸ்ட்டிற்கு இந்த பிரச்சனை வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனால், தனது வீட்டை சுற்றி வேலியை போல அமைத்துக் கொண்ட கேலிக்ஸ்ட், சுமார் 71 வயது வரை அதே வீட்டில் இருந்து அதிகம் வெளியே வராமல் இருந்துள்ளார். சுமார் 55 ஆண்டுகள் ஒரு பெண்ணின் வாடை கூட அறியாமல் இருந்த கேலிக்ஸ்ட், பெண்கள் தனது அருகில் கூட வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி வீட்டிலேயே தனிமையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் வெளியான தகவல்களின் படி, பெண்களை அருகில் பார்த்தாலே பயம் வரும் Gynophobia என்ற பிரச்சனை அவருக்கு இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பெண்கள் யாரேனும் அருகில் வந்தாலே பயந்து போய் விடுவாராம்.

ஆனால், அதே நேரத்தில் இத்தனை ஆண்டுகள் வீட்டிற்குள்ளேயே இருந்த கேலிக்ஸ்ட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் தான் உதவி செய்வார்களாம். அவர்கள் யார் அருகிலும் செல்லாத கேலிக்ஸ்ட், தள்ளி நின்றே உதவிகள் கேட்பதுடன் அவர்களும் தேவைப்படும் பொருட்களை அவரின் வீட்டில் வீசி கொடுத்து வந்தார்களாம்.

மேலும் வறுமை காரணமாக பெண்களை அருகில் சேர்த்து கொள்ளாத கேலிக்ஸ்ட், வீட்டில் இருந்து வெளியே வந்து செல்வதே மிக மிக அரிதான நிகழ்வாக இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இங்கு பலரும் பெண்களை ஏறெடுத்து பார்க்க மாட்டோம் என்றும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மார்தட்டிகூறி வருவதுடன் முரட்டு சிங்கிள் என்றும் தங்களை கூறி கொள்கின்றனர்.

ஆனால், அவர்கள் வெறும் வார்த்தைகளாக கூறி கடந்து செல்லும் சூழலில் நிஜத்தில் அப்படி ஒருவர் வாழ்ந்தது பலருக்கும் வியப்பான செய்தி தான்.

மேலும் உங்களுக்காக...