மலாலா யூசுப்சாய்: பெண் கல்விக்கான போராட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்த பெண்ணின் சாதனைகள் என்னென்ன தெரியுமா…?

மலாலா யூசுப் சாய் என்ற பெண்ணை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். பெண் கல்வி உரிமைக்காக போராடி தன் உயிரை துச்சம் என்று எண்ணி பனையம் வைத்து மரணத்தின் வாசல் வரை பார்த்துவிட்டு வந்தவர். இளம்…

Malala

மலாலா யூசுப் சாய் என்ற பெண்ணை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். பெண் கல்வி உரிமைக்காக போராடி தன் உயிரை துச்சம் என்று எண்ணி பனையம் வைத்து மரணத்தின் வாசல் வரை பார்த்துவிட்டு வந்தவர். இளம் வயதில் பெண் கல்விக்கான போராட்டத்தின் மூலம் உலகத்தின் அனைத்து ஆளுமைகளையும் திரும்பி பார்க்க வைத்தார் மலாலா.

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் மலாலா. அவர் பிறந்ததே பெண் கல்விக்கு எதிரான ஒரு சமூகத்தில் தான். அவரது தந்தை பள்ளி தாளாளராக இருந்தமையால் அவரால் பள்ளிக்கு எளிதில் செல்ல முடிந்தது. ஆனால் பள்ளி சென்ற சிறிது காலத்திலேயே பாகிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பிடித்ததால் பெண்கள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டது. அந்நேரத்தில் பெண் கல்விக்கு எதிரான இருப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார் மலாலா.

பிபிசி தொலைக்காட்சியின் மூலம் தனது போராட்டங்களை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பார்க்கும்படி செய்தார் மலாலா. அவரது போராட்டம் ஆரம்பித்த பின்னர் பாகிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தளர்ச்சி அடைந்த நிலையில், மீண்டும் பெண்கள் பள்ளிக்கு சென்றனர். இருந்தாலும் மலாலா மீது அதிக கோபம் கொண்ட தாலிபான்கள் அவரை பள்ளிக்கு தேடி சென்று அவரை சுட்டுக் கொள்ள முயன்று மலாலாவை சுட்டனர்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த மலாலா மிகுந்த போராட்டத்திற்கு இங்கு உயிர் பிழைத்தார். தன் உயிருக்கே அச்சுறுத்தலாக ஆனாலும் தன் உயிரை போனாலும் சரி என்று முடிவு எடுத்த மலாலா அந்த துப்பாக்கிச் சூடுக்கு பின்னரும் தன்னுடைய கொள்கைகளை கைவிடவில்லை.

பெண் கல்விக்கு ஆதரவாக பிரச்சாரத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களையும் தொடர்ந்து செய்து வந்தார் மலாலா. இது உலகத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பெருந்தலைவர்கள் கண்ணில் பட்டு அவர்களும் மலாலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பிறகு மலாலா டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பள்ளிக்கு செல்ல இயலாத குழந்தைகளை தனது டிரஸ்ட் மூலம் படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

மலாலா அமைதிக்கான நோபல் பரிசை வென்று இருக்கிறார் மற்றும் பெண் கல்விக்கு ஆதரவாக இருக்கும் சர்வதேச சின்னமாகவும் விளங்குகிறார் மலாலா. இளம் வயதில் ஒரு போராட்டத்தை கையெடுத்து நடத்தும் துணிவு படைத்த மலாலா அனைத்து குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் முன் மாதிரியாகவே இருக்கிறார்..