உலகையே பதற வைத்த விமான விபத்து.. கடைசியாக காதலிக்கு விமானி எழுதிய கடிதம்.. படிச்சதும் கண்ணீரே வந்துருச்சு..

By Ajith V

Published:

என்னதான் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருந்தாலும் சில விபத்துகள் நிகழ்வதை நிச்சயம் நம்மால் தடுத்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக பல முன்னேற்பாடுகள் செய்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிகழ்ந்து வரும் சூழலில் சில நேரம் இது தொடர்பான விபத்துக்கள் பற்றிய செய்தி படிக்கும் பலரையும் ஒரு நிமிடம் பதற வைத்து தான் வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு விமான விபத்தும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ என்னும் பகுதியில் இருந்து விமானம் ஒன்று வின்ஹெடோ என்னும் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது தான் எதிர்பாராத விதமாக அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதன் காரணமாக அந்த விமானம் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கீழே விழுந்த நொறுங்கியதுடன் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர். விமானிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 62 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ய, அவர்கள் அனைவருமே உயிரிழந்ததாகவும் பிரேசில் அதிபர் இரங்கல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் வைரலாகி இருந்த நிலையில் காக்பிட் அறையில் விமானிகள் கடைசி நிமிடத்தில் பேசிய ஆடியோவும் வாய்ஸ் ரெக்காடில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான கருவிகளும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் பின்னர் தான் இந்த விபத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில் விமான விபத்தில் உயிரிழந்த விமானி ஒருவர் தனது நான்கரை வருட காதலிக்காக கடைசியாக எழுதி வைத்த குறிப்பு தொடர்பான செய்தி தற்போது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. Thalita Valente மற்றும் விமானி Danilo ஆகிய இருவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
Booking Mix-Up Stopped More Deaths in Brazil Plane Crash That Killed 61

பிரேசிலில் நடந்த இந்த விபத்தில் தனது காதலன் டானிலோ உயிரிழந்ததும் இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் தலிதா வெளியிட்டிருந்தார். இதனுடைய அவரது காதலன் டானிலோவும் விமானத்தில் கிளம்புவதாக தனது காதலிக்கு வேண்டி கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக டானிலோ எழுதி வைத்த கடிதம் ஒன்றில், “இன்று என்னுடன் இருந்ததற்கு மிக்க நன்றி. நான் தற்போது செல்கிறேன். ஆனால் நிச்சயம் நான் திரும்பி வருவேன்” என குறிப்பிட்டதுடன் ஒரு ஹார்ட் மற்றும் சிரித்த முகத்துடன் இருக்கும் எமோஜியையும் அதில் வரைந்து வைத்துள்ளார் டானிலோ.
Tag Talita Valente Machado Portal de notícias do ABC

அதன் பின்னர் காதலியை விட்டு பிரிந்து சென்ற டானிலோ விபத்தில் உயிரிழந்து திரும்பியே வர முடியாத இடத்திற்கு போய் விட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...