உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் அவர்களின் பக்கத்து வீடு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வீட்டை வாங்க பல மில்லியனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதன் ஆரம்பகட்ட விலை ரூ.1660 கோடி என பட்டியலிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
மியாமியில் அமைந்துள்ள ஒரு தீவில், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கென ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாக்களில் ஒன்றுதான் தற்போது விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்ப் மைதானம் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த பங்களாவை உலகின் பெரும் செல்வந்தர்கள் வாங்க விரும்புகின்றனர். அதன் முக்கியமான காரணம், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெசோஸின் பக்கத்து வீடாக இருப்பதே.
இந்த பங்களாவின் சிறப்பம்சங்கள்:
1.84 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த பங்களா $200 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ,1660 கோடி) மதிப்புடையது.
இதனை வாங்குபவர்கள், ஜெப் பெசோஸ் மட்டுமின்றி உலகின் பல பிரபலங்களுடன் அண்டை வீட்டுக்காரர்களாக இருப்பார்கள். குறிப்பாக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் வீடும் அருகில் தான் உள்ளது.
இந்த ஆடம்பர பங்களாவின் தற்போதைய உரிமையாளர், 2018ஆம் ஆண்டு ரூ.228 கோடிக்கு வாங்கியுள்ளார். தற்போது, அது கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பக்கத்து வீடு யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,