இப்படி ஒரு லூசு பாகிஸ்தானுக்கு அதிபரா? ஷெரீப்பை கேவலமாக பார்த்த இத்தாலி பிரதமர் மெலோனி.. டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கு ரியாக்சன்..

எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளாலேயே மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியதுடன், அவருக்கு…

melony

எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளாலேயே மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியதுடன், அவருக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் டிரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்கு உயரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதிபர் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு பிறகுதான் அமைதி அடையப்பட்டுள்ளது. இவர் உண்மையாகவே ஒரு அமைதி மனிதர். உலக அமைதியை நிலைநாட்டுவதற்காக இவர் இடைவிடாமல் பாடுபட்டுள்ளார். டிரம்ப்பின் “சிறந்த, அசாதாரண பங்களிப்புகள், முன்மாதிரியான தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வை” ஆகியவற்றைப் பாராட்டிய ஷெரீப், அவருக்கு நோபல் அமைதி பரிசை மீண்டும் பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

“நோபல் அமைதி பரிசுக்கு மிகவும் உண்மையான மற்றும் அற்புதமான வேட்பாளர் இவர்தான் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இந்த நேரத்தில் இந்த உலகிற்கு மிகவும் தேவைப்பட்ட மனிதர் நீங்கள்தான் என்று நான் நினைக்கிறேன்.”

“ஏழு மற்றும் இன்று எட்டு போர்களை நிறுத்தச் சாதாரண வரம்புகளைத் தாண்டிச் சென்று அனைத்தையும் செய்த ஒரு மனிதராக உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்,” என்றும் ஷெரீப், டிரம்ப்பைப் புகழ்ந்து பேசினார்.

ஷெபாஸ் ஷெரீப் மேடையில் டிரம்ப்பை புகழ்ந்து பேசி கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நின்றிருந்தார். ஷெரீப்பின் பேச்சுக்கு மெலோனி அளித்த எதிர்வினை, சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சமூக ஊடக பயனர்கள் வெளியிட்ட காட்சிகளில், ஷெரீப் பேசும்போது மெலோனி மிகவும் முகம் சுளித்தவாறு காணப்பட்டார். அவரது முகபாவனைகள், “இப்படி ஒரு பொறுப்பற்ற, ஆழமற்ற கருத்தை சொல்லும் லூசு பாகிஸ்தானுக்கு அதிபரா?” என்று கேட்பதுபோல் இருந்ததாக பல பயனர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இதுபோன்ற ஒரு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் காட்டிய அதிகப்படியான உணர்ச்சிவசப்பட்ட தன்மையையும், டிரம்ப் குறித்து பேசிய அதீத புகழ்ச்சியையும் மெலோனி ரசிக்கவில்லை என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அமைதி மாநாட்டில் நடந்த முக்கிய இராஜதந்திர உரையாடல்களுக்கு மத்தியில், ஒரு உலகத் தலைவரின் இந்த அப்பட்டமான உடல் மொழி, செய்தியின் உள்ளடக்கத்தை விட அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.