6 அடிக்கு ஐ போன்.. அதுவும் வொர்க் ஆகுற கண்டிஷன்ல.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர்..

Published:

இனி வரும் காலங்களில் தொழிலநுட்ப வளர்ச்சிகள் தான் தொடர்ந்து இருக்கும் என்றும், அதன் மூலம் பெரிய புரட்சியே அரங்கேறும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு சமீப காலமாக தொழில்நுட்ப பொருட்களின் தாக்கம் சாதாரண மக்களிடம் கூட அதிகமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒருவர் மொபைல் போன் வைத்திருந்தாலே பெரிதாக பார்க்கப்படும் சூழலில், தற்போது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் கூட ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் நாம் செல் போன்களை பார்க்க முடிகிறது.

அத்துடன் இங்கே என்ன நடந்தாலும் மிக எளிதாக உலகில் ஒட்டுமொத்தமாக சென்று சேரும் அளவுக்கு வேகமும் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், விஞ்ஞானிகள் பலரும் கூட இது தொடர்பாக நிறைய புது புரட்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முன்பெல்லாம் பட்டன் போன், இப்போது டச் போன் என அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், யூ டியூபில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் செய்த விஷயம் தற்போது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு மாறி உள்ளது.

இந்திய வம்சாவளியான பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண்டன்ட் கிரியேட்டர் தான் அருண் ரூபேஷ் மைனி (Arun Rupesh Maini). இவருக்கு சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் 6.74 அடி கொண்ட உயரத்தில் ஐபோன் மாடல் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

அருண் ரூபேஷ் யூடியூப் தளங்களில் தொழில்நுட்பம் சார்ந்து வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் Mathew Perks உள்ளிட்ட ஒரு குழுவுடன் சேர்ந்து இந்த கனவு திட்டத்தையும் செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார் அருண் ரூபேஷ்.

ஆப்பிள் ஃபோனில் இருக்கும் அம்சங்கள் அனைத்தையும் சேர்த்து அதே போன்றொரு மாபெரும் ஐபோனை உருவாக்கி தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை செய்தது பற்றி பேசும் மைனி இது ஒரு சிறப்பான பெருமையான தருணமாக இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்காமல் போய் விடுவோமா என்று அச்சம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது அதில் இடம் பிடித்தது ஒரு கனவு நிஜமான தருணமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அருண் ரூபேஷ். கடந்த 13 வருடங்களாக யூடியூப் தளங்களில் நிறைய தொழில்நுட்ப ரீதியிலான வீடியோக்களை வெளியிட்டு வரும் அருண் ரூபேஷ் தற்போது இந்த மிகப்பெரிய அளவிலான ஐபோன் தயாரித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

அத்துடன் ஐ போனில் இருக்கும் அனைத்து அம்சங்களுடன் அப்படியே பயன்படுத்த முடியும் மனிதனை விட பெரிய சைசில் ஐ போனை செய்துள்ளது தான் தற்போது பலரையும் வாயை பிளந்து பார்க்க வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...