ஓர் எளிய இஸ்லாமியக் குடும்பத்தி பிறந்து இன்று உலகமே போற்றும் நகைச்சுவைப் பேச்சாரளாகவும், நடிகையாகவும், பட்டிமன்றம், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் உருவெடுத்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. பெயரிலேயே தனது ஊரையும் பெருமைப்படுத்தியிருக்கும் நிஷா முதன் முதலாக பட்டிமன்றப் பேச்சாளராக கடந்த 2005-ல் அடியெடுத்து வைத்தார்.
இவர் படபடவென பேசும் திறன், நகைச்சுவை பாங்கு ஆகியவை மக்களிடம் வரவேற்பினைப் பெற 2015-ல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மேடை நகைச்சுவைப் பேச்சுக் கலைஞராக அறிமுகமானார். தொடர்ந்து தனது திறமையாலும், பேச்சுத் திறனாலும் இன்று பிரபலமாக இருக்கிறார் அறந்தாங்கி நிஷா.
பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் அறந்தாங்கி நிஷா தற்போது 9-வது விஜய் டெலிவிஷன் விருதுகளில் ரியாலிட்டி ஷோக்களில் சிறந்த ஜோடி விருதினைப் பெற்றுள்ளார். இவருடன் KPY பாலாவும் இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். தான் விருதினை வென்றது குறித்து தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினைப் பகிரிந்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா.
அதில், “எல்லாருக்கும் வணக்கம், நேத்து எல்லாருமே விஜய் தொலைக்காட்சி நிகழ்வ பார்த்துட்டு நான் அவார்ட் வாங்கியதற்கு வாழ்த்து சொன்னீங்க, முதல்ல உங்க எல்லாருக்கும் நன்றி. இந்த அவார்டு மட்டும் இல்ல நான் மேடைல வாங்குற சின்ன கைதட்டலா இருந்தா கூட அது மொத்தமும் என் அப்பாவுக்கு மட்டுமே போய் சேரும், அறந்தாங்கில ஒரு கறிக்கடைக்காரர் ஓட பொண்ணு தான் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்தால் கூட உனக்கு படிப்பு முக்கியம் என்று சொல்லிக் கொடுத்தது என் அப்பா.
தைரியமா இருக்கணும் எல்லாத்தையுமே எதிர்கொள்ளனும்னு எங்க அப்பாவை பார்த்து தான் கத்துக்கிட்டேன், 2005 ல தாமரை அண்ணன் தான் என்ன பட்டிமன்றத்துக்கு அறிமுகப்படுத்தினாங்க அப்பாகிட்ட தான் வந்து முதல்ல பேசினாங்க சொந்தம் எல்லாரும் நண்பர்கள் அப்பா கிட்ட அதெல்லாம் அனுப்பாதீங்க ஏதாவது தவறாக போயிரும்னு சொன்னப்போ, அத்தனை பேரும் முன்னாடியும் என் பொண்ணு எந்த தப்பும் பண்ண மாட்டான்னு முழுசா நம்புனது என் அப்பா மட்டும்தான்.
அவருக்கு இந்த அவார்டு பத்தி எல்லாம் தெரியாது, கொண்டு போய் கொடுக்கும்போது இது எத்தனாவது பரிசுமா அப்படின்னு தான் கேட்டார் , மொத்த அன்பையும் பொண்ணுக்காகவே கொடுக்கிற அப்பா பொண்ணு சும்மா இல்லங்க அவளுக்கு உலகமே அப்பாதான் வறுமையிலும் எங்களுக்கு வறுமைன்னா என்னன்னே தெரியாம வளத்த மனுஷன் நான் என்ன கூட ஏமாத்துவேன்.
நினைவுக்கு வந்த அப்பா.. மளமளவென எழுதித் கௌதம் வாசுதேவ் மேனன்.. உருவான வாரணம் ஆயிரம்..
ஆனா ஒரு நாளும் என் அப்பாவை ஏமாத்த மாட்டேன். யாரு என்ன சொன்னாலும் என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்குனு அடிக்கடி சொல்ற அந்த வார்த்தை இந்த நிமிஷம் வரைக்கும் என்னை எல்லா மேடைகளையும் ஓட வைக்குது, கண்டிப்பா நம்ம எல்லாருக்குமே ஒரு கனவு இருக்குங்க நம்ம எங்க இருந்து வர்றோங்கறது முக்கியம் இல்ல, அந்தக் கனவுக்கு நம்ம உண்மையா இருக்குறது தான் முக்கியம்.
நிறைய கனவு காணுங்கள் அதுக்காக ஓடிக்கிட்டே இருங்க, எந்த விமர்சனங்களுக்கும் காது கொடுக்காதீங்க, சில நேரங்கள்ல நம்ம வெறுக்கிறவங்களை மட்டுமே யோசிக்க ஆரம்பிச்சுடுவோம் ஆனா நம்மளை நேசிக்கிறவங்க நம்ம பக்கத்திலேயே இருக்காங்க ,அந்த இதயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம், இந்த அவார்டை முழுமையா நான் என்னோட அப்பாக்கு கொடுக்கிறேன்,அவர் கறி கடையில நாள் முழுக்க நின்ற கஷ்டம் எல்லாம் அவருக்கு இந்த அவார்ட பார்க்கும்போது மறைந்திருக்கும் நம்புறேன், இதுக்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம் தான் என்ன உங்க வீட்டு பிள்ளையா முழுசா ஏத்துக்கிட்டதுக்கு எப்பவுமே நன்றி சொல்லிக்கிட்டே இருப்பேன்…. சொல்ல மறந்துட்டேங்க என் அப்பா பேரு இப்ராஹிம்சா” என்று விருதினை தன் தந்தைக்கு சமர்ப்பித்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா.