ஹிட் படங்கள் தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

By John A

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த தயாரிப்பாளர் டில்லி பாபு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி என்ற பெயரில் பல திரைப்படங்களைத் தயாரித்து வந்தவர்தான் டில்லி பாபு. இவரது தயாரிப்பில் மரகத நாணயம், ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே, இரவுக்கு ஆயிரம் கண்கள், கள்வன் போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார்.

இவற்றில் பெரும்பாலான படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. கடந்த 2015-ல் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம்ன டில்லி பாபு தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து ஹிட் படங்களைக் கொடுத்தார்.

நடிகராக முதல் மூன்று படம் பிளாப்.. இயக்குநராக ஹாட்ரிக் வெற்றி.. வெங்கட் பிரபு சாதித்தது இப்படித்தான்..

இவரது படங்கள் அனைத்தும் வித்யாசமான கதைக் களங்களைக் கொண்டிருப்பதால் புதுமுக இயக்குநர்கள் பலர் இவரிடம் கதை சொல்ல ஆர்வத்துடன் வருவர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டில்லி பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருக்கு வயது 50. தன் மகனை ஹீரோவாக்க எண்ணி வளையம் என்ற இணையத் தொடரை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார் டில்லி பாபு.

இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டில்லி பாபு தயாரித்த ராட்சசன், மரகத நாணயம் போன்ற படங்கள் சிறந்த படங்களாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.