ஒரே கருவில் பிறந்த இரட்டையர்கள்.. ஆனா ஒருத்தர் ஆசியா, இன்னொருத்தர் வெளிநாடு.. தல சுத்த வெச்ச பின்னணி

By Ajith V

Published:

பொதுவாக இரட்டையர்களாக பிறக்கும் ஆட்கள் உருவத்தில் தொடங்கி பல விஷயங்களில் ஒற்றுமையுடன் தான் விளங்குவார்கள். மேலும் முகமும் ஒரே போன்று இருப்பதால் அவர்களை அறிந்து கொள்வதே கடினமான விஷயமாக இருக்கும். அவர்களுடன் நெருங்கி பழகும் நபர்கள் வேண்டுமானால் சில அடையாளங்கள் அல்லது பழக்க வழக்கங்கள் மூலம் வித்தியாசங்களை உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால், அவர்களைத் தாண்டி மற்றவர்கள் இரட்டையர்களில் வித்தியாசத்தை கண்டுபிடிப்பதே சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி ஒரு சூழலில் தான், ஒரு இரட்டையர்கள் பற்றி தற்போது வெளியான செய்தி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. இதற்கு காரணம், அந்த இரட்டையர்களில் ஒரு பெண் ஆசிய இனத்தவர். இன்னொருவர் வெள்ளை நிற இனத்தவர் என்பது தான்.

இவர்கள் யார் என்பது பற்றியும், இரட்டையர்களாக இருந்தும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக மாறியது எப்படி என்பதையும் தற்போது பார்க்கலாம். லிப்பி (Libby) மற்றும் சப்ரினா (Zabrina) ஆகிய இரண்டு பெண்கள் தான் அந்த இரட்டையர்களாக பிறந்தவர்கள். இதில் லிபி ஆசிய இனத்தைச் சேர்ந்தவர். சற்று கருமையான நிறத்துடன் கருமையான விழிகளையும் கொண்டவர்.

ஆனால் அதே வேலையில் சப்ரினா வெள்ளை நிறத்தில் இருப்பதுடன் நீல நிற கண்களும் அவருக்கு உள்ளது. அவர் வெள்ளை இனத்தவராகவும் உள்ளார். இது எப்படி என பலருக்கும் குழப்பங்கள் வரலாம். மருத்துவ முறைப்படி Heteropaternal superfecundation என்றும் இந்த விஷயம் அறியப்படுகிறது. இது நாய்கள் மற்றும் பூனைகள் மத்தியில் அதிகம் இருந்தாலும் மனிதர்கள் மத்தியில் அரிதாக நடைபெறுவது தான்.

இதன் பின்னணி என்ன என்பது பற்றி லிப்பி மற்றும் சப்ரினா ஆகியோர் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் இருவரின் தாயார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது லிப்பி தந்தையுடனும் அதே நேரத்தில் சப்ரினாவின் தந்தையுடனும் உறவில் இருந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருடனும் ஒரே நேரத்தில் உறவு கொண்டதால் லிப்பியின் தந்தையின் விந்தணுவும், சப்ரினாவின் தந்தையின் விந்தணுவும் ஒரே கருமுட்டையில் சேர்ந்துள்ளது. இதன் காரணமாக வெவ்வேறு தந்தைகளிடமிருந்து உருவான இரண்டு குழந்தைகள் இரட்டையர்களாக ஒரே கருவில் சேர்ந்துள்ளது. இந்த செய்தி பின்னாளில் லிப்பி மற்றும் சப்ரினாவின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது.

அவர்கள் பின்னாளில் மகள்களை தனியாகவும் வளர்த்து வந்துள்ளனர். மேலும் இந்த விஷயம் தெரிந்ததும் குழந்தைகளை வளர்ப்பதற்கு தகுதியான பெற்றோர் இல்லை என்பதும் அவர்கள் தாய் மீது நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் லிப்பி மற்றும் சப்ரினா ஆகிய இருவரும் பார்ப்பதற்கு இரட்டையர்கள் போல் இல்லாமல் இருந்ததால் அவர்கள் உறவுக்கார பெண்களாகவே வளர்ந்து வந்துள்ளனர்.

ஆனால் 11 வயதாக இருக்கும் போது தான் அவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்ற ஆச்சரிய தகவலும் தெரிய வந்துள்ளது. உறவுக்கார பெண் தனது உடன் பிறந்த சகோதரி என தெரிந்ததும் இருவருமே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

இது பற்றி பேசும் அவர்கள், இரண்டு பேருக்கும் ஒரே பிறந்தநாள் வந்தாலும் பார்ப்பதற்கு உருவத்தில் ஒத்தில்லாமல் இருந்ததால் சகோதரிகள் என்ற சந்தேகம் வந்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...