சமீபத்தில் நிக் யார்டி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பில், 22 வயதான தனது காதலி ஜேட் மற்றும் 44 வயதான அவரது தாய் டேனி ஆகிய இருவரும் தங்களது குழந்தைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இரு குழந்தைகளுக்கும் தந்தை தானே என்றும் தெரிவித்துள்ளார்.
இது உண்மையாக இருக்காது; வெறும் நகைச்சுவை நிகழ்ச்சி போன்றதுதான் என்று சிலர் கமெண்ட் செய்தாலும், இந்த மூவரின் உறவு உண்மையானதே என யார்டி உறுதியாக கூறியுள்ளார்.
அவருடைய கூற்றுப்படி, ஜேட் ஒரு பெண் குழந்தையை எதிர்பார்க்கிறார், டேனி ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்க்கிறார். இருவரும் வெறும் இரண்டு வார இடைவெளியில் கர்ப்பம் ஆனார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து, யார்டியின் கைகளை பிடித்தபடி தங்கள் வயிற்றை தடவி நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தில் தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது மிக அரிதானது. ஆனால், ஒரே நபரால் அவர்கள் கர்ப்பமானது உலகத்துக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.