பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பின்போது, இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவை மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், பாகிஸ்தான் ரஷ்யாவுடனான வலுவான உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கசகஸ்தானின் அஸ்தானாவில் கடைசியாக சந்தித்த பிறகு, ஒரு வருடத்திற்கு பிறகு ரஷ்ய, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு தலைவர்களும் தற்போது சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முக்கியமான ஒரு தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், குறிப்பாக வணிக துறையில் தீவிரமாக மேம்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் எண்ணெய் இறக்குமதி செய்ததால், இருதரப்பு வர்த்தகம் அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்யா, பாகிஸ்தானுக்குள் ஒரு போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. இது பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக வளர்ச்சிக்கு உதவும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இரு தரப்பிலும் உள்ள ஒரு வலுவான பிணைப்பை காட்டுவதாக அவர் கூறினார்.
“இந்தியாவுடனான உங்கள் உறவை நாங்கள் மதிக்கிறோம். அது நன்றாக இருக்கிறது. ஆனாலும், நாங்களும் ரஷ்யாவுடன் மிகவும் வலுவான உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். இந்த உறவுகள் பிராந்தியத்தின் நன்மைக்கும், முன்னேற்றத்திற்கும், செழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும்” என்று ஷெரீஃப் தெரிவித்தார்.
தன்னை ரஷ்யாவிற்கு வருவதற்கு அழைத்ததற்கு புதினிடம் நன்றி தெரிவித்த ஷெரீஃப், விரைவில் மாஸ்கோவுக்கு சென்று தனது பழைய நினைவுகளை புதுப்பித்து கொள்வதாகக் கூறினார்.
இந்தச் சந்திப்பின் மூலம், பாகிஸ்தான், இந்தியாவுடனான தனது உறவு எவ்வளவு வலுவாக இருந்தாலும், தங்களுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யாவை மறைமுகமாக வலியுறுத்தியது வெளிப்படையாகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
