இந்த காரணங்களுக்காக, Deepseek பயன்பாட்டை அரசு சாதனங்களில் தடை செய்வது, அமெரிக்கன் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றுவது மற்றும் அமெரிக்க கிளவுட் சேவைகளில் Deepseek AI மாடல்களை வழங்குவதை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன.
ஏற்கனவே டெக்சாஸ் மாகாணம் Deepseek மற்றும் ரெட் நோட் போன்ற சீன பயன்பாடுகளை அரசு சாதனங்களில் பயன்படுத்த தடை செய்துள்ளது. இம்மாகாண கவர்னர் கிரெக் அபோட், இந்த செயலிகள் சீன அரசின் தரவுகளை அணுகுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று கூறி, இந்தத் தடை அமல்படுத்தப்பட்டது.
மேலும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் Deepseek பயன்பாட்டை அரசு சாதனங்களில் தடை செய்யும் மசோதாவை முன்மொழிந்துள்ளனர். அவர்கள், சீன அரசால் தரவுகள் அணுகப்படலாம் என்ற அச்சத்தில், இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள், சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் அமெரிக்க வர்த்தகத்தில் உள்ள நிலையைப் பற்றிய தொடர்ச்சியான பதட்டத்தை வெளிப்படுத்துகின்றன.