இந்த நிலையில், Deepseek பயனர்களின் டேட்டாவை தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் அதிகமாக உள்ளதால், அமெரிக்க அரசு இதை அரசு அலுவலகங்களில் தடை செய்யும் அளவுக்கு அச்சம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் மிலிலின் என்ற கிராமமே Deepseek நிறுவனர் Liang Wenfeng அவர்களின் பிறந்த இடம். அங்கு தான் அவர் தனது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி படிப்பை முடித்து, பின்னர் அருகில் உள்ள நகரத்தில் பல்கலைக்கழக கல்வியைப் பயின்றார்.
தொழில்நுட்ப உலகில் போராடி சாதித்த Liang Wenfeng, Deepseek என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததன் விளைவாக, உலகளவில் புகழ்பெற்றார். அவரது மட்டும் அல்லாமல், அவர் பிறந்த கிராமமும் பிரபலமாகியுள்ளது.
அவர் பிறந்த கிராமத்தை பார்க்க தினமும் கிட்டத்தட்ட 10,000 பேர் வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் தங்குவதற்கான வசதிகள் இல்லாததால், உள்ளூர் நிர்வாகம் அவசரமாக புதுப்பிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கிராமத்தில் மொத்தம் 29 வீடுகளும், 700 பேர்களும் மட்டுமே வசிக்கின்றனர்.
ஆனால் மிலிலின் கிராமம் உலக அளவில் பிரபலமாகிவிட்டதால், சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு, தெருக்களில் குப்பைகள் அகற்றப்பட்டு, புதிய மரங்கள் நட்டு, அழகு சேர்க்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இந்த கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்கு இருந்த மண்ணை எடுத்துச் சென்று, இது Liang Wenfeng வாழ்ந்த மண் என நினைவுப் பொருளாக வைத்துக்கொள்கிறார்கள். இதை காண்பதற்கு தமிழ் படத்தில் வரும் “எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைப்போம்” என்ற பாடலை நினைவுபடுத்தும் சம்பவமாக மாறியுள்ளது.