மொபைல் போன் என்பது பேசுவதற்கு என்ற நிலை மாறி தற்போது கேமரா, இன்டர்நெட் உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போதே கேமராவின் தன்மை உயர்வாக இருக்கும் ஸ்மார்ட்போனையே பலர் விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. Samsung Galaxy S25 Ultra
Samsung தனது Galaxy S25 Ultra-வில் 200MP பிரதான சென்சார், 10MP 3x டெலிபோட்டோ லென்ஸ், 50MP 5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ, மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் வழங்கியுள்ளது. 8K LOG வீடியோ பதிவு, AI மேம்படுத்தப்பட்ட Zoom, HDR தொழில்நுட்பம் ஆகியவை இது வழங்கும் முக்கிய அம்சங்கள். நிழலிலும் ஒளியிலும் சிறந்த விவரங்களை வழங்கும் கமெரா மாடல்.
2. Vivo X200 Pro
Vivo X200 Pro, 200MP டெலிபோட்டோ லென்ஸுடன் புகைப்பட உலகை புரட்டிப் போட்டுள்ளது! 3.7x ஆப்டிக்கல் Zoom, 5x டிஜிட்டல் Zoom, 10x ஹைபிரிட் Zoom வழங்குகிறது. Super Landscape Mode மூலம், நட்சத்திர-filled வானம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை தானாகவே மேம்படுத்தும்.
3. iPhone 16 Pro Max
Apple எப்போதும் Megapixel போட்டியில் ஈடுபடாது. ஆனால், அதன் 48MP Fusion Camera Sensor ஒரு Game-Changer! Zero Shutter Lag, அதாவது தடையில்லாமல் சுதாரணமாக புகைப்படங்கள் எடுக்கும் திறன். 12MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் – 5x ஆப்டிக்கல் Zoom, மேம்பட்ட சரும வண்ண நம்பகத்தன்மை, மற்றும் இயற்கை நிறப்பதிவு. 4K 120fps Slow-Motion வீடியோ பதிவு – உள்ளடக்க தயாரிப்பாளர்களுக்கு சிறந்த தேர்வு.
4. Google Pixel 9 Pro
Google Pixel 9 Pro, AI-சார்ந்த Computational Photography-யில் மைல்கல்லாக திகழ்கிறது. 50MP பிரதான சென்சார் – குறிப்பாக HDR மற்றும் குறைந்த ஒளியில் மிகத் தெளிவான படங்கள். 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் – Zoom செய்யப்பட்ட புகைப்படங்கள் கூட மிகத் தெளிவாக இருக்கும். Google-ன் மேம்பட்ட Post-Processing தொழில்நுட்பம் மூலம், குறைந்த ஒளியில் கூட சிறப்பான புகைப்படங்கள் கிடைக்கும்.
5. iPhone 16 Pro
iPhone 16 Pro, Pro Max-னின் பெரும்பாலான அம்சங்களை சிறிய ஸ்கிரீனில் கொண்டிருக்கிறது! 48MP அல்ட்ரா-வைட் சென்சார் – Macro Photography-க்கு சிறந்தது. மேம்பட்ட 5x Telephoto Zoom – சிறந்த பின்புல நீக்கப்பட்ட போர்ட்ரெயிட் புகைப்படங்கள். ஓர் உன்னதமான புகைப்பட மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்கும் சிறந்த மாற்று.
மேற்கண்ட 5 ஸ்மார்ட்போன்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்..