ஒரு கார் அல்லது இரண்டு கார் வைத்திருந்தாலே பணக்காரர் என்று கூறப்படும் நிலையில் 600 ரோல்ஸ்ராய் கார்கள் உள்பட மொத்தம் 7000 கார் வைத்துள்ள ஒரு பணக்காரர் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் புருனையின் சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா!
இவரது கார்களின் மதிப்பு மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 7000 கார்கள் அவர் சொந்தமாக வைத்திருந்தாலும் அவர் வைத்திருக்கும் கார்களை அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. இவரிடம் உள்ள கார்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்
புருனையின் சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியாvஇடம் 600 Rolls Royce கார்கள் உள்ளன. 1990களில் Rolls Royce மற்றும் Bentley நிறுவனங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்தித்தபோது, இவர் தொடர்ந்து கார்கள் வாங்கியதால் தான் அந்த நிறுவனங்கள் மீண்டும் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவரது திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட கார் Rolls Royce Silver Spur II. இந்த கார் 24-கேரட் தங்கம் பூசியதாகும். மேலும் இவரிடம் Bespoke Bentley மாடல்கள், Bentley Buccaneer, Bentley Camelot, Phoenix, Imperial, Rapier, Pegasus, Silverstone, Spectre ஆகியவை உள்ளன. Ferrari 456 GT Venice போன்ற பிரத்தியேக Ferrari மாடல்களும் அவரது வசம் உள்ளன.
புருனை சுல்தான் ஹசனல் போல்கியா Istana Nurul Iman எனப்படும் உலகின் மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கிறார். 2.1 மில்லியன் சதுர அடியில் பரவியுள்ள இந்த அரண்மனைக்கு 1,788 அறைகள், 257 குளியலறைகள், 5 நீச்சல் குளங்கள் உள்ளன.
மேலும் Boeing 747 விமானம், தங்கத்தால் செய்யப்பட்ட தனிப்பட்ட படுக்கையறை, தங்கத்தால் செய்யப்பட்ட மேஜைகள், குளியலறை மற்றும் தங்க கழிவறை இவரது அரண்மனையில் உள்ளது. தனது 50வது பிறந்தநாளில், அவர் மைகேல் ஜாக்சனை $17 மில்லியன் கொடுத்து தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். 3,000 விருந்தினர்களை அழைத்து, கிங் சார்ல்ஸுடன் போரோ போட்டியும் நடத்தினார். அந்த ஒரே இரவில் நிகழ்ச்சியின் செலவு $27 மில்லியன் ஆகும் இவர் இவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பதற்கு ஒரே காரணம் எண்ணெய். ஆமாம் இவருக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான கச்சா எண்ணெய் கிணறுகள் உள்ளன.
1980கள் வரை உலகின் மிகப்பெரிய பணக்காரர் இவர் தான். ஆனால் பிற்காலத்தில் பில்கேட்ஸ் முந்தினார். தற்போதும் $30 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் இருக்கிறார்.