இதுகுறித்து Realme தனது X பக்கத்தில் இரண்டு புதிய பதிவுகளின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் பதிவில் “Slam, The Ultra Way” மற்றும் “Coming Soon” என்ற அறிவிப்புடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்தப் பதிவில், “The ULTRA experience is on its way! Ready to SLAY?” எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பதிவில் “All-Round Slamer” மற்றும் “Not one, not two, but a TRIPLE THREAT. Brace for the ULTRA revolution” என தெரிவித்து அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.
மேலும் Realme அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போனின் கேமரா, செயல்திறன், மற்றும் வடிவமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்பாக தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இம்மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் Geekbench லிஸ்டிங்கில் உள்ளது. MediaTek Dimensity 8350 செயலி மற்றும் 12GB RAM கொண்டதாக இருக்கும். மேலும், 8GB RAM மற்றும் Android 15 அடிப்படையிலான புதிய Realme UI இயக்குதளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.