மனைவியிடம் கூட சொல்ல கூடாதா? மெட்டாவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர் புலம்பல்..!

  தனது அலுவலக சம்பந்தப்பட்ட விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்ததற்காகவே வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக, மெட்டா நிறுவன ஊழியர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்தில் பல…

Meta

 

தனது அலுவலக சம்பந்தப்பட்ட விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்ததற்காகவே வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக, மெட்டா நிறுவன ஊழியர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டா நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த அந்த ஊழியர், தனது லிங்க்டின் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

“கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, நான் வேலை பார்க்கும் நிறுவனமான மெட்டாவின் சில விஷயங்களை என் மனைவியிடம் பகிர்ந்தேன். அவை ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த தகவல்களே. எனினும், நான் என் மனைவியிடம் பகிர்ந்ததை மெட்டா நிறுவனம் தெரிந்து கொண்டு, என்னை வேலையில் இருந்து நீக்கியது. ஊடகங்களில் இந்த தகவல் வெளிவருவதற்கு முன்பே நான் என் மனைவியிடம் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டேன். அதனால், வேலை இருந்து நீக்கப்பட்டேன்.”

தனது மனைவியிடம் பகிர்ந்த தகவல் ஒன்றும் ரகசியமானது இல்லை என்றும், முன்னணி ஊடகங்களில் வெளிவந்த தகவல்களையே பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அந்த விஷயத்தை மனைவியிடம் பகிராமல், என் மனைவியே அந்த விஷயங்களை ஊடகங்களிலேயே பார்த்து தெரிந்து கொண்டிருந்தால், இந்நேரம் எனக்கு வேலையிழப்பு பிரச்சனை ஏற்பட்டிருக்காது.” என அவர் நக்கலுடன் கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு போனஸ் கொடுப்பதற்கு முந்தைய நாளில் வேலை விட்டு நீக்கப்பட்டுள்ளேன். இதனால், போனஸ் தவிர்ப்பதற்காகவே என்னை வேலை விட்டு நீக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி, “உங்களுக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும்.” என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.