இன்னும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களே இருக்காது. இனி AR கண்ணாடிகள் தான்:  மார்க் ஸக்கர்பெர்க்

  சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பேசியபோது தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் மாற்றங்கள் மற்றும் புதுமைகளை கணித்தார். அவருடைய கணிப்பின்படி கடந்த 30 ஆண்டுகளாக ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் செலுத்தி…

mark

 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பேசியபோது தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் மாற்றங்கள் மற்றும் புதுமைகளை கணித்தார். அவருடைய கணிப்பின்படி கடந்த 30 ஆண்டுகளாக ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. ஆனால் படிப்படியாக, ஸ்மார்ட்போன்களில் இருந்து Augmented Reality (AR) கண்ணாடிகள் நோக்கி பெரிய மாற்றம் ஏற்பட போகிறது என்றும், ஸ்மார்ட்போன் படிப்படியாக மறைய போகிறது என்று தெரிவித்தார்..

உலகமே Augmented Reality நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், Apple, Meta, X போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தத் துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றன என தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை  மார்க் ஸக்கர்பெர்க் கணிப்பதாக தெரிவித்தார். சமீப காலத்தில் AI மற்றும் AR உதவியுடன் நமது வாழ்க்கையை முழுமையாக மாற்றவுள்ள  சாதனம் ‘ஸ்மார்ட் கண்ணாடிகளாக இருக்கலாம் என்றும், எதிர்காலத்தில் எல்லோரும் ஸ்மார்ட்போனை கைவிட்டு ஸ்மார்ட் கண்ணாடிகள் வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் ஸ்மார்ட்போன்களை முற்றிலும் ஸ்மார்ட் கண்ணாடிகள் மாற்றிவிடுமா? அது சாத்தியமா? என்ற கேள்வி பலர் மனதில் எழுந்து வரும் நிலையில் நிச்சயம் சாத்தியம் தான் என பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் லேண்ட்லைனில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றம் அடைய சில ஆண்டுகள் தான் பிடித்தது. இப்போது எங்கேயும் கிட்டத்தட்ட லேண்ட் லைன் இல்லை. அதுபோல், ஸ்மார்ட்போன்களில் இருந்து ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு மாற்றம் எளிதாக நடைபெறாது என்றாலும், ஸ்மார்ட் கண்ணாடி ஒரு நாள் நிச்சயம் ஸ்மார்ட்போனை அழித்துவிடும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகளில் AI கண்காணிப்பு மற்றும் கேமரா அம்சங்கள், கண்ணாடியின் பேட்டரி திறன் உள்ளிட்டவை சவாலானது என்றாலும் எதிர்காலத்தில் முடியாதது அல்ல என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மார்க் ஸக்கர்பெர்கின் Orion Project மூலம்,  முதல் முறையாக மிகவும் மேம்பட்ட AI கண்ணாடிகள் அறிமுகமாகி உள்ளன. இந்த கண்ணாடிகளில் ஹோலோ கிராபிக் திரைகள் உள்ளதால், இதன் மூலம்  உலகில் வரையறுக்கப்பட்ட மெய்நிகர் படங்களை காண முடியும்.  செல்போன் இல்லாமல் டெக்ஸ்ட் அல்லது கால் செய்ய முடியும்.

கண் இயக்கம் (eye tracking), கை அசைவுகள் (hand gestures) மற்றும் குரல் கட்டளை (voice command) மூலமாக, Orion சாதனம் தானாக இயங்க தொடங்கிவிடும்.

Meta நிறுவனம் சமீபத்தில் Ray-Ban நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் Meta-வின் AI சார்ந்த தொழில்நுட்பம் மற்றும்  Ray-Ban ஸ்டைலிஷ் கண்ணாடிகளில் குரல் கட்டுப்பாடு, கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகியவற்றுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இது AR அம்சம் கொண்ட கண்ணாடிகளாக பயன்படுத்தப்படும் . இந்த ஆராய்ச்சி  ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக AR கண்ணாடிகள் விரைவில் உலகளவில் பரவப் போகின்றன என்பதற்கான முதல் அறிகுறி என்றே கூறப்படுகிறது.