கூகுள் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு வேகம்.. டிஜிட்டல் புரட்சி செய்யும் சீனா..!

  டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருந்து வருகிறது என்பதும், அமெரிக்கா உள்பட பல நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா புதுப்புது கண்டுபிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது என்பதும் தெரிந்தது.…

zuchongzhi

 

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் உலகின் நம்பர் ஒன் நாடாக சீனா இருந்து வருகிறது என்பதும், அமெரிக்கா உள்பட பல நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா புதுப்புது கண்டுபிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், இதுவரை கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் தான், அதி வேகமான குவாண்டம் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதைவிட 10 லட்சம் மடங்கு அதிகமான குவாண்டம் கம்ப்யூட்டரை சீனா அறிமுகம் செய்துள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத் துறையில் இது ஒரு பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

சீனா அறிவியல் அகடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு ஜூச்சோங்ஷி 3 என்ற பெயரில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே ஜூச்சோங்ஷி 1 மற்றும் ஜூச்சோங்ஷி 2 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் அடுத்த வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது.

ஜூச்சோங்ஷி 3 சூப்பர் கம்ப்யூட்டர் 105 கியூபிக் மற்றும் 182 கப்ளர் ப்ராசசர் கொண்டது.   தற்போதைய சக்தி வாய்ந்த கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு வேகத்தில் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000  ஆண்டுகளில் செய்யும் பணிகளை வெறும் 200 நொடிகளில் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது அதே பணியை சீனாவின் கம்ப்யூட்டர் ஜூச்சோங்ஷி 3 வெறும் 14 நொடிகளில் செய்து முடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சூப்பர் கம்ப்யூட்டர்களை சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி கண்டுபிடித்து வரும் நிலையில், சீனாவின் இந்த கம்ப்யூட்டரை விட கூகுள் அதைவிட வேகமான கம்ப்யூட்டரை கண்டுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.