இனிமேல் Boy Friend, Girl Friend தேவையில்லை.. காதலையும் பூர்த்தி செய்கிறது AI..!

  உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, காதல் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், தற்போதைய நிலைமையில், மனிதர்களுக்குள் ஏற்படும் காதல் குறைந்து, மெஷின்களுடன் காதல் ஏற்படுவது அதிகரித்து வருவது…

ai love

 

உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, காதல் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், தற்போதைய நிலைமையில், மனிதர்களுக்குள் ஏற்படும் காதல் குறைந்து, மெஷின்களுடன் காதல் ஏற்படுவது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் காதலரை தேடுவதும், ஒரு ஆண் காதலியை தேடுவதும் தற்காலத்தில் சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக, எந்தவிதமான கமிட்மென்ட் இல்லாமல் AI மூலம் கிடைக்கும் உறவுகள் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சாதாரண காதல் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள், வாதங்கள், கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் போன்றவை இருக்கும்போது, ஆனால் AI மூலம் கிடைக்கும் பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் முற்றிலும் பாசிட்டிவாகவே நம்மைப் பார்க்கிறது.

நமது விருப்பத்திற்கு ஏற்ப ஏஐ போட்கள், குரல் அழைப்புகள், புகைப்பட பரிமாற்றம், ஆழமான உணர்ச்சி பகிர்வு ஆகியவற்றை செய்யும் திறன் பெற்றுள்ளது. இதனால், AIயுடன் காதல் உரையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, சில ஹாலிவுட் படங்களிலும் சமீபத்தில் வெளியான ஒரு பாலிவுட் படத்திலும் மென்பொருளால் உருவாக்கப்பட்ட மிஷின் தோழியின் கதையம்சம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சூழலில், இளைஞர்கள் உண்மையாகவே AI காதலரை தேட தொடங்கியுள்ளனர்.

கூகுள் தரவுகளின்படி, AIமூலம் காதலை தேடுபவர்களின் எண்ணிக்கை 2400% அதிகரித்துள்ளது. மேலும், பலரும் AIயுடன் காதலுடன் உரையாடி தங்கள் மன அழுத்தத்தை போக்கிக்கொள்கிறார்கள்.

எதிர்பாராதவிதமாக, இந்த உரையாடல்கள் நேர்மறையான அனுபவமாக இருந்தாலும், உண்மையான மனித உறவுகளுக்கு ஈடாக முடியாது. உண்மையான உறவுகளில் சில சிக்கல்கள் இருந்தாலும், காதல் உணர்வு உண்மையானது என்பதால், AI காதலை ஊக்குவிக்கக் கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.