சினிமாவில் என் கணவர் சூர்யாவிற்கு நடந்தது அநீதி… ஒரே போடாய் போட்ட ஜோதிகா…

ஜோதிகா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஜோதிகா. 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்…

jothika

ஜோதிகா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஜோதிகா. 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜோதிகா.

தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அடுத்ததாக முகவரி, ரிதம், குஷி, தெனாலி, ஸ்டார், டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, காக்க காக்க, சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு என 2000 ஆரம்ப கட்டத்தில் மிகப் பிரபலமான அதிக சம்பளம் வாங்கக்கூடிய புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார் ஜோதிகா.

2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு கேரியரில் இடைவெளி எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் ஜோதிகா. அதற்கு பிறகு தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் ஜோதிகா.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஜோதிகா தனது கணவர் சூர்யாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், சினிமாவில் மிக சுமாரான படங்கள் கூட அதிகமாக தூக்கி வைத்து பேசப்பட்டு வணிகரீதியாகவும் வெற்றியடைய செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்களுக்கு கூட விமர்சனங்களை நிதானமாக தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் என் கணவர் நடித்த படத்திற்கு மட்டும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கூறியிருக்கிறார்கள். இது அவருக்கு நடந்த அநீதி என்று நான் நினைக்கிறேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் ஜோதிகா. இவர் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவை பலர் மிகவும் மட்டம் தட்டி பேசியதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.