கூகுள் போட்டோஸ் தரும் புதிய வசதி.. ஒரு பெரிய பிரச்சனை நீங்கியது..!

  கூகுள் போட்டோஸ் தற்போது ‘Undo Device Backup’ என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கிளவுட்  ஸ்டோரேஜில் புகைப்படங்கள் இருப்பதை நீக்கி, அவை அனைத்தையும் மொபைலிலேயே வைத்திருக்க முடியும்.…

google photos

 

கூகுள் போட்டோஸ் தற்போது ‘Undo Device Backup’ என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், கிளவுட்  ஸ்டோரேஜில் புகைப்படங்கள் இருப்பதை நீக்கி, அவை அனைத்தையும் மொபைலிலேயே வைத்திருக்க முடியும். இதனால் ஸ்டோரேஜ் மேனேஜ்மென்ட் அதிக கட்டுப்பாட்டை வழங்குவதுடன், முக்கியமான மீடியா கோப்புகளை இழக்காமல் Google Drive சேமிப்பிடத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

கூகுள் போட்டோஸ் பல ஆண்டுகளாக பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாப்பாக சேமிக்க பயன்படுத்தும் முக்கியமான பிளாட்பாரமாக உள்ளது. இருப்பினும்,  கிளவுடில் சேமிக்கப்பட்ட பிறகு, அதை நிர்வகிப்பதற்கான விருப்பங்கள் மிகக்குறைவாக இருந்தன. கிளவுடில் இருந்து ஒரு படத்தை அழித்தால், சாதனத்திலிருந்தும் அது நீங்கிவிடும் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது, ‘Undo Device Backup’ வசதி மூலம், பயனர்கள் Google கிளவுடிலிருந்து கோப்புகளை நீக்கி, அதை தங்களது மொபைல் சாதனத்தில் வைத்திருக்க முடியும். இதனால் ஒரு பெரிய பிரச்சனை நீங்கியது.

இந்த வசதி, குறிப்பாக Google Drive சேமிப்பிடம் குறைவாக இருக்கும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவையற்ற கோப்புகளை கிளவுடிலிருந்து நீக்கி, முக்கியமான கோப்புகளை மட்டும் வைக்க உதவுகிறது.

கூகுள் தந்துள்ள இந்த புதிய வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். முதலில் Android சாதனத்தில் கூகுள் போட்டோஸ் என்ற செயலியை ஓப்பன் செய்ய வேண்டும். அதன்பின் ப்ரொஃபைல் செட்டிங்ஸில் பேக்கப் செட்டிங்ஸ் செல்லவும். அதன்பின் Manage Storage  என்பதை தேர்வு செய்து,  ‘Undo Device Backup’ என்பதை தேர்வு செய்து, கூகுள் கிளவுடிலிருந்து எந்த மீடியா கோப்புகளை நீக்க வேண்டும் என்பது தேர்ந்தெடுக்கவும். குறிப்பிட்ட கோப்புகளை நீக்குவதன் மூலம், பயனர்கள் மொபைலில் மீடியா கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்,