மன அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கிறது. சிலர் வெளியே சொல்வார்கள் பலர் வெளியே சொல்லாமலேயே இதனால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை தான் இந்த மன அழுத்தத்துக்கு காரணம். ஆனால் இது மிகவும் கவனிக்கப்படக்கூடிய ஒரு விஷயம். அப்படி இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உடலில் பலவித நோய்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதை பற்றி இனி காண்போம்.
நாம் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்தோம் என்றால் முதலில் தூக்கமின்மை நோய் ஏற்படும். இந்த தூக்கம் இன்மை நம் உடம்பில் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். அதனால் சரியான நேரத்தில் இதை கண்டறிய வேண்டியது அவசியம்.
மன அழுத்தம் என்பது இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் இதயத்துடிப்பு மற்றும் ரத்த நாளங்களை சுருங்கச் செய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இருந்தால் சளி பிரச்சனை அதிகமாகும். ஏனென்றால் இந்த மன அழுத்தத்தினால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் போது சளி போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாக நேரிடும்.
மன அழுத்தம் அதிகமாக இருந்து அதை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் இரைப்பை பாதித்து குடல் இயக்கங்களை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. செரிமான ஆரோக்கியத்தை பாதித்து வயிற்றுப்போக்கு வீக்கம் போன்றவைகளை ஏற்படுத்துகிறது. அதனால் மன அழுத்தம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.