ஒன்பிளஸ் Red Rush Days என்ற விற்பனையை அறிவித்துள்ள நிலையில் இதில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு சாதனங்கள் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், மற்றும் EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட OnePlus 13 மற்றும் OnePlus 12 தொடர்களும் இதில் அடங்கும்.
ஒன்பிளஸ் Red Rush Days விற்பனை மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. OnePlus.in, Amazon, Croma, மற்றும் Reliance Digital போன்ற பல்வேறு தளங்களில் ஒன்பிளஸ் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இதில் என்னென்ன சலுகைகள் என்பதை பார்ப்போம்,
OnePlus 13, 13R: இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.5,000 உடனடி கேஷ்பேக், ரூ.7,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.3,000 தள்ளுபடியும் பெறலாம்.
OnePlus 12: இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.8,000 தள்ளுபடி மற்றும் ரூ.4,000 வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல் OnePlus 12R ரூ.10,000 தள்ளுபடியில் கிடைக்கும், கூடுதலாக ரூ.3,000 வங்கி சலுகையும் பெறலாம்
OnePlus Nord 4: இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.4,000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் OnePlus Nord CE4 வாங்குபவர்கள் ரூ.2,000 வங்கி தள்ளுபடியை பெறலாம்.
OnePlus Nord CE4 Lite வாங்குபவர்கள் ரூ.1,000 வங்கி சலுகை பெறலாம்.
இந்த Red Rush Days விற்பனை ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், செயலி, Amazon, Croma, Reliance Digital மற்றும் Vijay Sales தளங்களில் கிடைக்கும். சில தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு 24 மாதங்கள் வரை குறைந்த வட்டியற்ற EMI வசதியும் உண்டு.