Vijay students meet| தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகிடுச்சு.. விஜய் பரபரப்பு பேச்சு

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது.. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல அதற்கான மேடையும் இது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார்.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகளை இன்று வழங்கி வருகிறார் நடிகர் விஜய். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றிருந்தார்கள். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என தமிழக வெற்றிக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று நிகழ்வில் முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்கி வருகிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கி வருகிறார்.

இன்று விழாவில் மாணவ-மாணவிகள் முன்பு விஜய் பேசுகையில், “நடந்து முடிந்த 10வது மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த எனது தம்பி, தங்கைகளுக்கும், பெருமையோடு வந்துள்ள அவர்களின் பெற்றோர்களுக்கும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக இருக்கும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ராஜேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

பாசிட்டிவான எனர்ஜி உள்ளவர்களை பார்க்கும்போது தானாகவே ஒரு எனர்ஜி, கெமிஸ்ட்ரி உருவாகும் என்று சொல்வார்கள் இல்லையா. அது உங்களின் முகத்தை பார்த்ததில் இருந்து இன்று காலையில் இருந்து எனக்கு பயங்கரமாக வொர்க் அவுட் ஆகி உள்ளது. எனது தம்பி தங்கைகளே என்று ஆரம்பித்த நடிகர் விஜய், தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருக்கிறது..’ ‘ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல அதற்கான மேடையும் இது இல்லை.. அதேநேரம் ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்கிற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது என்று கூறினார்