கல்கி பகவானே இவங்களைக் காப்பாற்றுங்க… வேண்டும் பிரபலம்… என்ன சொல்கிறார்?

நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் 600 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வெளியான கல்கி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள சூழலில் பிரபலம் ஒருவர் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே படமான கல்கி 2898 ஏடி படம் நேற்று வெளியானது. இது விஞ்ஞானமும், புராணமும் சேர்ந்து எடுக்கப்பட்ட படம்.

குருஷேத்திரப் போரில் தொடங்கி யு டர்ன் போட்டு 2898 காலகட்ட்ததிற்கு படம் நகர்கிறது. புராணம், விஞ்ஞானம் என மாற்றி மாற்றிப் பயணிக்கிறது.

படத்தோட தலைப்பைப் பார்க்கும்போதே நாம முடிவு பண்ணிடலாம். இது கிருஷ்ணபரமாத்மாவின் 10வது அவதாரமான கல்கி. அதைப் பற்றித் தான் எடுத்திருக்காங்க. படத்தில் இது வரை நாம் பார்க்காத பிரம்மாண்டம், விஎப்எக்ஸ், செட், வண்டி, கன் என புராண விஷயங்களையும், விஞ்ஞான விஷயங்களையும் ரொம்ப அழகாகப் பண்ணியிருக்காங்க. இது ஒரு பான் இண்டியா படம்.

தமிழ்ல எழுத்து கூட போடலை. ஆங்கிலத்தோடு போட்டு டைட்டிலை முடிச்சிடுறாங்க. 3 மணி நேரம் படம் ஓடுது. இந்தப் படத்தில் பாட்டு இல்லை. இந்தப் படத்தை எப்போ வேணாலும் போய் பார்க்கலாம். கதை பெரிய அளவில் இல்லை.

எப்போ போய் பார்த்தாலும் கதை புரியாது. சுப்ரீம், காம்ப்ளக்ஸ் என 2 விஷயத்தைப் பற்றி மட்டும் அடிக்கடி பேசுறாங்க. இன்னொன்னு என்னன்னா மெனக்கிடல் சூப்பரா இருக்கு.

Kalki
Kalki

பிரபாஸ் ஒரு வேலை பார்க்குறாரு. திங்க, தூங்க, சண்டை போட இதுதான் அவரோட ரோல். இதுல கமல் வர்ற சீன் அவரை மாதிரியே தெரியாது. கடைசியில் தான் அது கமல் என்பதே தெரியும். அப்படி ஒரு மேக்கப். படத்தில் ஹீரோ அமிதாப்பா, பிரபாஸான்னு குழப்பம் வரும். அமிதாப் தான் ஹீரோ. செகண்ட் ஹீரோபிரபாஸ்.

துல்கர் சல்மான் 3 காட்சிகளில் வருகிறார். புராணம், விஞ்ஞானத்தை சரிபாதியாகக் கலந்துள்ளார். கிளி ஜோசியம் மாதிரி விஷயங்களை அங்கங்கே அள்ளித் தெளித்து இருப்பார் இயக்குனர். இந்தப் படத்தில் கல்கி பிறக்குறதுக்க முன்னாடி ஒரு 10 ஆயிரம் பேராவது செத்துடுறாங்க.

அவர் பிறக்கிறாரா இல்லையான்னு படத்தைப் பார்த்தால் தெரியும். மக்களைக் காப்பாத்துறதுக்குத் தான் கல்கி அவதாரம் எடுத்து பூமிக்கு வர்றாருன்னு சொல்றாங்க. இந்தப் படம் எடுக்குறவங்கக்கிட்ட இருந்து பார்வையாளர்களைக் காப்பாத்துங்கன்னு கல்கி பகவான்கிட்ட வேண்டிக்குவோம்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.