நாங்குநேரி சின்னதுரை அருகில் அமர்ந்த விஜய்.. மாணவர்கள் மீட்டில் மாஸ் சம்பவம்

Published:

சென்னை: சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும் முன்பு, நாங்குநேரி மாணவர் சின்னத்துரை அருகில் போய் அமர்ந்தார். இதை பார்த்து பலரும் நெகிழ்ந்து போனார்கள்.

தமிழகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழ்ங்கும் திட்டத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு தொடங்கினார். அதன்பின்னரே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகரப்பூர்வமாக விஜய் தொடங்கினார். 2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த முறை பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா , இன்றும், ஜூலை 3-ம் தேதியும் என 2 கட்டங்களாக கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று நிகழ்வில் முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்கி வருகிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கி வருகிறார்.

இந்த விழாவில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

இன்றைய விழாவில் அரங்குக்கு வந்த விஜய் வந்த உடனேயே தளபதி தளபதி பாடல் ஒலிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த விஜய் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்தார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்தும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு வரிசையாக பரிசு வழங்கிய விஜய், அவர்களை குடும்பமாக வரவழைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அத்துடன் அந்த புகைப்படங்களை மாணவர்களுக்கு உடனடியாக தரவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...