விஜய், சீமான் கூட்டணியில் அன்புமணி.. தேமுதிகவும் வர வாய்ப்பு.. உருவாகிறது வலிமையான 3வது அணி..!

  இதுவரை தமிழகத்தில் ஒரு வலிமையான மூன்றாவது அணி அமைந்ததில்லை என்பதும், மக்கள் நல கூட்டணி என்ற மூன்றாவது அணி அமைத்து அதில் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது என்பதும் தெரிந்தது. ஆனால், இந்த முறை…

3rd front

 

இதுவரை தமிழகத்தில் ஒரு வலிமையான மூன்றாவது அணி அமைந்ததில்லை என்பதும், மக்கள் நல கூட்டணி என்ற மூன்றாவது அணி அமைத்து அதில் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது என்பதும் தெரிந்தது. ஆனால், இந்த முறை அதிமுக, திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் ஒரு வலிமையான மூன்றாவது அணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாகவும், சீமான் மற்றும் விஜய்யிடம் அன்புமணி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

“குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நான்கு கட்சிகளும் கூட்டணியில் இணைந்தால், அதிமுக, திமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும், 50 முதல் 75 தொகுதிகளை இந்த கூட்டணி பெற்றால், இந்த கூட்டணியின் ஆதரவு இல்லாமல் அதிமுக, திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் முறையாக மூன்றாவது கூட்டணி ஆட்சி அமைக்குமா? அல்லது மூன்றாவது கூட்டணியின் உதவியுடன் தமிழகத்தில் ஆட்சி அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.