அட்சய திருதியை முடிந்த பின்னரும் ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Published:

நேற்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க வியாபாரம் ஜோராக இருந்தது என்றும் சென்னை மதுரை கோவை போன்ற முக்கிய நகரங்களில் கோடி கணக்கில் நகைகள் விற்பனையானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை தினத்தில் தங்க நகை வாங்குவதை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் வழக்கமாக கொண்டு வருகின்றனர் என்பதும் அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் விசேஷம் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அட்சய திருதியை தினத்தில் ரூ.5605 என்ற விலையில் ஒரு கிராம் தங்கம் விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் உயர்ந்து ரு.5615 என விற்பனையாகி வருகிறது. அட்சய திருதியை முடிந்த பின்னரும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இன்னும் ஒரு சில வாரங்களில் கிராம ரூபாய் 6000 என்ற நிலையை  எட்டும் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும் இந்தியாவில் தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பதும் தான் தங்கம் விலை உயர்வு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் வாரங்களில் திருமண சீசன் தொடங்க இருப்பதை அடுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பங்குச்சந்தை நாளுக்கு நாள் இறங்கி கொண்டே வருவதை அடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருவதாகவும் இதனால் தான் தங்கத்தின் தேவை அதிகரிப்பதாகவும் எனவே தங்கம் விலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது என்பது வெள்ளி வாங்குபவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் 80 ரூபாய் 40 காசு என்ற நிலையில்  இன்று 40 காசு குறைந்து ஒரு கிராம் 80 ரூபாய் என்றும் ஒரு கிலோ 80 ஆயிரம் ரூபாய் என்று விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்வதில் மிகவும் நம்பகமானது என்றும் எனவே இதில் முதலீடு செய்பவர்களுக்கு நீண்ட நாள் அடிப்படையில் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...