ரூம் போட்டு யோசித்தாலும் தோனியை விட பெட்டரா எதுவும் இல்லை: ஹர்பஜன்சிங் ட்வீட்..!

Published:

இந்த உலகத்தில் ஒன்றை விட ஒன்று பெட்டராக இருக்கும் ஆனால் ரூம் போட்டு யோசித்தாலும் தோனியை விட பெட்டராக எதுவுமே இல்லை என கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு வீரராக இருந்தார் என்பதும் அப்போது அவர் தமிழில் ட்விட் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்த உலகத்துல ஒன்னை விட ஒன்னு பெட்டரா தான் இருக்கும். ஆனா எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்ம்., அவங்களோட தோனியை விட பெட்டரா ஒன்னு இல்லப்பா. கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா.ஆப்பு வெச்சது தல தான் என அவர் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ஹர்பஜன் சிங் பலமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும் தல தோனி குறித்தும் தனது ட்விடட்ர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இந்த ட்விட்டுக்கும் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

மேலும் உங்களுக்காக...