DRO | சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை.. பறந்து வந்த டிரான்ஸ்பர் ஆர்டர்.. 20 டிஆர்ஓக்கள் இவர்களா?

சென்னை: தமிழகத்தில் திருப்பூர், சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை , திருவள்ளூர் உள்பட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கரள (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின்…

Tamil Nadu government orders transfer of 20 district revenue officers in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் திருப்பூர், சென்னை , ஸ்ரீபெரும்புதூர் , கோவை , திருவள்ளூர் உள்பட 20 மாவட்ட வருவாய் அலுவலர்கரள (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு மருத்துவப் பணிகள் பொது மேலாளர் கீதா, புதுக்கோட்டை டி.ஆர்.ஓ.வாக மாற்றப்பட்டுள்ளார். பரந்தூர் தனி டி.ஆர்.ஓ. (நில எடுப்பு) நாராயணன், நீலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலக தனி அலுவலர் ராமபிரதீபன், திருவண்ணாமலை டி.ஆர்.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்துசமய அறநிலையங்கள் துறை தனி அலுவலர் -2 ஜானகி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். சிப்காட் பொது மேலாளர் கார்த்திகேயன், திருப்பூர் டி.ஆர்.ஓ.வாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை டி.ஆர்.ஓ. பிரியதர்ஷினி, பரந்தூர் தனி டி.ஆர்.ஓ.வாக (நில எடுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இணை தலைமை தேர்தல் அதிகாரி அரவிந்தன், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவின் தனி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (தஞ்சாவூர்) ஸ்ரீமோகனா, இந்துசமய அறநிலையங்கள் துறை தனி அலுவலராக-2 மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை டி.ஆர்.ஓ. அனுசுயா தேவி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். வருவாய் நிர்வாக துணை ஆணையர் (திட்டங்கள்) ஆனந்தி, விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதி -1 (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ. காளிதாஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புறவட்டச்சாலை (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ. லீலா அலெக்ஸ், சென்னை சிப்காட் பொது மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் டி.ஆர்.ஓ. ஜெய்பீம், சென்னை அரசு விருந்தினர் இல்ல வரவேற்பு அலுவலரானார். கவர்னரின் முன்னாள் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர் செங்கோட்டையன், விருதுநகர் சிப்காட் (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ.வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஆவின் பொது மேலாளர் ஆலின் சுனேஜா, தமிழ்நாடு வக்பு தீர்ப்பாய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரந்தூர் டிட்கோ (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ. பேபி இந்திரா, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் திட்டங்கள் (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வக்பு தீர்ப்பாய உறுப்பினர் குமாரவேல், விழுப்புரம் நெடுஞ்சாலைத் திட்டங்கள் (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ.வாக மாற்றப்பட்டுள்ளார். கோவை தமிழ்நாடு மாநில வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ஜெயச்சந்திரன், தென்காசி டி.ஆர்.ஓ.வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, சிவகங்கை டி.ஆர்.ஓ.வானார். விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ. வீராசாமி, மதுரை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி டி.ஆர்.ஓ.வாக மாற்றப்பட்டுள்ளார்” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.