நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில்…

Tamil Nadu Cabinet Reshuffle 2024: Udhayanidhi Stalin Gets Deputy CM Post, Senthil Balaji Re-inducted

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியில் வந்த நிலையில், அவர் முன்பு பதவி வகித்த அதே துறை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் திமுக கொறடா கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகிக்க உள்ளார்கள்.

பால்வளத்துறை அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம்.நாசருக்கு தற்போது மீண்டும் அமைச்சராகவும், திமுக கொறடா கோ.வி செழியன் மற்றும் சேலம் ஆர்.ராஜேந்திரன் புதிதாக அமைச்சராக உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

அமைச்சர்கள் மாற்றம் மற்றும் பொறுப்பேற்பு யார் யார்:

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை அமைச்சராக நியமனம்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றம்.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை மற்றும் காதி அமைச்சராக மாற்றம்.
உயர்கல்வித்துறை புதிய அமைச்சராக கோ.வி.செழியனுக்கு வாய்ப்பு.