5ஜி வசதிக்காக அப்டேட் செய்கிறோம்” என்று அழைப்பு வந்தால், அதில் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன், அந்த அழைப்பில் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சிறிய ஒரு தவறே கூட நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காலி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
சமீபத்தில், மனிஷா என்ற முப்பது வயது பெண், “4ஜி-யிலிருந்து 5ஜி இணைய சேவைக்கு இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். உங்கள் சிம் கார்டை 5ஜி-க்கு நாங்கள் மாற்றித் தருகிறோம்” என கூறினர்.
மனிஷா சிம்மில் குறிப்பிடப்பட்டுள்ள 20 இலக்க எண் சொல்லும்படி கேட்டனர். அதைச் சொன்னால் உடனே சிம் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறினர். இதை கேட்டு மனிஷா, “நீங்கள் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? அப்படியே எனது சிம்மின் விவரங்கள் உங்களிடம் இருக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டபோது, அதற்கு சில விளக்கம் கூறப்பட்டது.
துரதிருஷ்டவசமாக, மனிஷா அந்த எண்ணிற்கு அவர் கூறிய தகவல்களை குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில், அவரது மொபைல் நெட்வொர் செயலிழந்தது. மேலும் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுமையாக காலியாகிவிட்டது. அப்போதுதான் அவர் ஏமாந்துவிட்டார் என்பதை உணர்ந்தார்.
இதனால், 5ஜி வசதி செய்து தருகிறோம்” என்று யாராவது அழைத்தால், அது முழுக்க முழுக்க ஆபத்தான அழைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.