சென்னை, தாம்பரம் மக்களே நாளை முதல் இரவில் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க

By Keerthana

Published:

சென்னை: சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை – எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 12 இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-விழுப்புரம் மற்றும் கடற்கரை – எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விரங்கள்

சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், அதே நாளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, திருவள்ளூரில் இருந்து அதே தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து அதே தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று (4-ந்தேதி) மற்றும் 6, 8 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், அதே தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சாரரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேர ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சாரரயில்களும், இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்பட்டு செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டிலிருந்து வரும் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு 8.45, 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும், அதே நாட்களில் திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து வரும் இன்று (4-ந்தேதி), 6, 8 ஆகிய தேதிகளில் காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலும் கடற்கரை – எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படும்” இவ்வாறு தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...